யு19 உலக சாம்பியனான இந்திய அணிக்கு ரூ.7.5 கோடி ரொக்கப் பரிசு: பிசிசிஐ அறிவிப்பு
மும்பை: நடப்பு யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.7.5 கோடியை ரொக்கப் பரிசாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
ஹராரே நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி. இந்த தொடரின் வரலாற்றில் இந்திய அணி வெல்லும் ஆறாவது சாம்பியன்ஷிப் பட்டமாக இது அமைந்தது.
“யு19 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் இளையோர் அணியை எண்ணி ஒட்டுமொத்தமா தேசமும், பிசிசிஐ-யம் பெருமிதம் அடைகிறது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வி பெறாமல் சாம்பியின் ஆகியுளளது. அதுவும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய விதம் அபாரம். அவர்களுக்கு பிசிசிஐ சார்பில் ரூ.7.5 கோடி பரிசு அறிவிக்கிறோம்” என பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா தெரிவித்தார்.
இந்த தொடரில் 7 ஆட்டங்களில் விளையாடி இருந்தார் இந்தியாவின் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி. மொத்தம் 259 பந்துகளில் 439 ரன்களை அவர் எடுத்திருந்தார். இதில் 41 பவுண்டரிகள் மற்றும் 30 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். இறுதிப் போட்டியில் 175 ரன்கள் எடுத்து மிரட்டினார். இதன் மூலம் இந்த தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றார். இறுதிப் போட்டியிலும் ஆட்ட நாயகன் விருதை அவரே வென்றிருந்தார்.
ஆசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்ற இந்திய வீரர்
புதுடெல்லி,
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர் னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் கலந்துகொண்டார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட ருத்ராங்ஷ் பட்டீல் 251.9 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். தங்கம் வென்ற ருத்ராங்ஷ் பட்டீலுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?