வீட்டு வாடகை பாக்கியை கேட்க சென்ற உரிமையாளரை அடித்து கொன்ற தம்பதி
Dec 20 2025
10
காஜியாபாத்: டில்லி அருகே, நான்கு மாத வாடகை பாக்கியை கேட்க சென்ற வீட்டு உரிமையாளரை, குக்கரால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொன்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்.
தலைநகர் டில்லி அ ருகே காஜியாபாதில், ஆரா கைமேரா குடியிருப்பு வளாகம் உள்ளது.
சந்தேகம்
இங்குள்ள வீட்டில் வசிக்கும் உமேஷ் சர்மா - தீப்ஷிகா தம்பதி, தங்களின் மற்றொரு வீட்டை அஜய் குப்தா - அக்ருதி தம்பதிக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். கடந்த நான்கு மாதங்களாக, அஜய் குப்தா தம்பதி வாடகை தரவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, வாடகை பாக்கியை கேட்பதற்காக அவர்களின் வீட்டிற்கு நேற்று முன் தினம் உரிமையாளர் தீப்ஷிகா, 48, சென்றார். பல மணி நேரமாகியும் வீடு திரும்பாததால், தீப்ஷிகா வீட்டு பணிப்பெண் மீனா, அஜய் வீட்டிற்கு சென்று இது குறித்து கேட்டார்.
தங்கள் வீட்டில் இருந்து தீப்ஷிகா கிளம்பிவிட்டதாக கூறிய அஜய் குப்தா, முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால், சந்தேகம்அடைந்த பணிப்பெண் மீனா, குடியிருப்பு வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.
கைது
அப்போது, தீப்ஷிகா அஜய் வீட்டுக்கு சென்றது மட்டுமே பதிவாகியிருந்தது. அங்கிருந்து அவர் வெளியே வரவில்லை என்பதும் உறுதியானது.
இதற்கிடையே, அஜய் குப்தா தம்பதி வீட்டில் இருந்து பெரிய சூட்கேசுடன் வெளியே புறப்பட்ட போது, அவர்களை மீனா தடுத்து நிறுத்தினார். வலுக்கட்டாயமாக அவர்களை வீட்டிற்கு உள்ளே அனுப்பி வெளியே தாழிட்டார்.
பின், போலீசுக்கு புகாரளித்தார். இதையடுத்து, அஜய் வீட்டுக்கு வந்து போலீசார் நடத்திய சோதனையில், பெரிய சூட்கேசில் இருந்து தீப்ஷிகா சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரணையில், பிரஷர் குக்கரால் தலையில்அடித்தும், கழுத்தை நெரித்தும் தீப்ஷிகா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
வாடகை கேட்க வந்தபோது, தங்களை தாக்கியதால் பதில் தாக்குதல் நடத்தியதாக கூறிய அஜய் குப்தா தம்பதி, ஒரு கட்டத்தில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?