🌷🌻🤓🙏😚🌷😁🌹🤐😂
ஆஹா!
எல்லா ஓய்வு பெற்ற நண்பர்களுக்குமான அன்பான அர்ப்பணிப்பு 💓💓
பல்லடம் சாய்சேகர் அவர்களின் பதிவு
படித்ததில் பிடித்த பதிவின் பகிர்வு
நன்றிங்க
🌷🌻🤓🙏😚🌷😁🌹🤐😂
1. ஓய்வு பெற்றவர் அதிக நேரம் படுக்கையில் படுத்திருந்தால்…
மனைவி : இன்னுமா எழுந்துகல? எவ்வளவு நேரம் தூங்குவீங்க! வேலை இல்லைனா எப்ப பாரு தூங்கனுமா?
2. ஓய்வு பெற்றவர் அதிகாலையில் எழுந்துவிட்டால்…
மனைவி : உங்களுக்கு தூக்கமே வராதா? காலைல 4 மணிக்கே எழுந்து சத்தம் போட்டால், மத்தவங்க எப்படி தூங்குவாங்க ? ஆஃபீஸ் இல்லன்னா, பேசாம தூங்குங்க!
3. ஓய்வு பெற்றவர் வீட்டிலேயே இருந்தால்…
மனைவி : எழுந்ததும் மொபைலும் கையுமா உட்கார்ந்தா எப்படி? , எப்பப் பாரு டீ டீ..... ! சின்ன சின்ன வேலைகளை செய்யலாம் இல்ல ? வீட்டை விட்டு வெளியே கிளம்பாமல், இங்கேயே உக்காந்து கிட்டு... சும்மா... . உங்களால எல்லாருக்கும் வீட்டு வேலை லேட்டாகுது!
4. ஓய்வு பெற்றவர் எப்பொழுதும் வெளியே சுற்றித்திருந்தால்…
மனைவி : இவ்வளவு நேரம் எங்க போனீங்க? ஆஃபீஸ் தான் இப்ப ப
கிடையாதே? இப்போவும் வீட்டிலேயே சும்மா இருக்க முடியலையா? குடும்பத்தோடு கொஞ்சம் பேசலாம் இல்ல .....!
5. ஓய்வு பெற்றவர் பக்தி வழிபாட்டில் ஈடுபட்டால்…
மனைவி : கோவில் கோவிலா சுத்தினா பணம் வருமா? அப்படி இருந்திருந்தா பூசாரிகள்தான் பெரிய பணக்காரர்கள் ஆகிருப்பாங்க.... . டாடா, பில் கேட்ஸ் எல்லாம் இல்லையே! எப்பவும் "ராம்ராம்", சங்கரா சங்கரா.... மாலை, மணி—அதே வேலை தானா!
6. ஓய்வு பெற்றவர் மீண்டும் வேலையிலே சேர்ந்தால்…
மனைவி : உங்களுக்கு வேலைதான் எல்லாமா? இவ்வளவு வயசு ஆகிவிட்ட பிறகும் பணத்துக்காக ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? எப்பவுமே உங்களுக்காக காத்திருக்கிகனுமா நாங்க?
7. ஓய்வு பெற்றவர் மனைவியை புனித யாத்திரைக்கு அழைத்துச் சென்றால்…
மனைவி : பக்கத்து வீட்டு மோகனப்பாருங்க.... ஒவ்வொரு மாதமும் தன் மனைவியை ஷிம்லா, டார்ஜிலிங் எல்லாம் கூட்டிட்டு போறாராம்! நீங்கோ, எப்பவும் என்னை ஹரித்வாருக்குத்தான் கூட்டிக்கொண்டு போகிறீங்க!
8. ஓய்வு பெற்றவர் மனைவியை சுற்றுலா இடங்களுக்கு (நைனி தால், காஷ்மீர், கோவா, ஊட்டி…) அழைத்துச் சென்றால்…
மனைவி : வீடு தான் முக்கியம் ! வீணா செலவு பண்ணுறீங்க. உங்க கிட்ட பணம் கொட்டி கிடக்குதோ? அந்த பணத்தை வச்சு வீட்ட modify செய்யலாம்... , எனக்கு நாலு புடவை வாங்கி தரலாம்....
9. ஓய்வு பெற்றவர் பழைய பாடல்களை ரசித்தால்…
மனைவி : கிழத்துக்கு காதல் பாட்டு கேக்குதோ.... ? இளைமை ஊஞ்சலாடுதோ? பாடணும்னா பக்திப் பாடல்கள் பாடுங்க!
10. ஓய்வு பெற்றவர் நண்பர்களை அழைத்து பேசினால்…
மனைவி : எப்பவும் மொபைலும் கையுமா...... தான் பேச்சுப்பேச்சு.... ! யார் கிட்ட இவ்வளவு நேரம் பேசறீங்க? நாங்கள் யாரையும் இப்படி பேசி போரடிக்க மாட்டோம்!
11. ஓய்வு பெற்றவர் அழகாக மேக்கப் போட்டு இருந்தால் …
மனைவி : இந்த வயசில அலங்காரம் கேக்குதோ ? வேற எங்கே போகப் போறீங்க? வீட்டில் மருமகள் இருக்கிறா—உங்களைப் பார்த்து என்ன நினைப்பா?
உண்மையிலேயே நம்மில் பலருக்கும் பரிச்சயமாகத்தான்இருக்கும் இந்த அனுபவங்கள்தான்!!...✍️
🤍❤️🌹