
சென்னை: கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதி கரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழ் நாடு முழுவதும் உள்ள மருத்துவத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் முக்கிய சேவைத் துறை அலுவலர்களுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் 2025 ஜனவரி 1 முதல் தற்போது வரை 15,796 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ள னர். கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்த நிலை யில், தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் டெங்கு பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது” என்றார். டெங்கு காய்ச்சலால் ஒரு இறப்புகூட நேரக்கூடாது என்பது தான் தமிழக அரசின் முதன்மையான நோக்கம் என்று கூறிய அமைச்சர், பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?