6 நாட்களுக்கு மழை வாய்ப்பு: தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

6 நாட்களுக்கு மழை வாய்ப்பு: தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

சென்னை:

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய சக்தி புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது. இது செவ்வா யன்று மேலும் தென்கிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது துவார காவிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 970 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராம நாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சா வூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதனன்று நீலகிரி, கோயம் புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%