கடலூரில் விஜய் பிரச்சாரம்: அனுமதி கேட்டு த.வெ.க.வினர் மனு

கடலூரில் விஜய் பிரச்சாரம்: அனுமதி கேட்டு த.வெ.க.வினர் மனு

கடலூர், செப். 25–


கடலூரில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு த.வெ.க.வினர் காவல்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.


தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக அவர் திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். 2-வது கட்டமாக அவர் நாகை, திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டர். நடிகர் விஜய் வருகிற 11-ந் தேதி கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


விஜய் பேசுவதற்காக கடலூரில் 2 இடங்களை தேர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரை சந்தித்து மனு அளித்தனர். தமிழகம் முழுவதும் வெற்றி பேரணியில் தமிழ்நாடு, வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.


இந்த நிலையில் அக்டோபர் மாதம் 11-ந்தேதி கடலூர் மாவட்டத்திற்கு விஜய் வந்து மக்களை நேரில் சந்தித்து பேசுகிறார். கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம் மற்றும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை பகுதியில் மதியம் 2 மணிக்கு தலைவர் விஜய் மக்களை சந்தித்து பேச உள்ளார். அப்போது ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள். ஆகையால் 2 இடங்களில் விஜய் பேசுவதற்கு அனுமதி அளித்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%