கடலோரப் பள்ளி சின்னப்பாலத்தில் உலக அஞ்சல் தினம்

கடலோரப் பள்ளி சின்னப்பாலத்தில் உலக அஞ்சல் தினம்



பாம்பன் சின்னப்பாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டது.


1969 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடந்த உலக அஞ்சல் யூனியன் மாநாட்டில் அக்டோபர் 9 ஆம் தேதி முதன்முதலில் உலக அஞ்சல் தினமாக அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து, அஞ்சல் சேவைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் உலகம் முழுவதும் உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது.


தகவல் தொடர்பின் அதீத வளர்ச்சியால், மறக்கப்பட்ட கடிதம் எழுதும் முறையை இன்றைய தலைமுறை அறிந்து கொள்வது அவசியம்.


எனவே, வளரும் இளைய தலைமுறை மாணவர்களுக்கு கடிதம் எழுதும் பயிற்சியை வழங்கும் நோக்கில், தங்களது பெற்றோரை முதல் பருவத்தேர்வு தரநிலை அறிக்கையில் கையொப்பமிட பள்ளிக்கு வருமாறு அழைத்து மாணவர்கள் கடிதம் எழுதினர்.


கடிதம் எழுதிய அனுபவம் மாணவர்களுக்கு புதிய அனுபவத்தையும், ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது.


மாணவர்களின் அஞ்சல் அட்டைகள் அஞ்சல் அலுவலகத்தில் சேர்க்கப்பட்டன.


கடிதம் எழுதும் பயிற்சியை ஆசிரியர்கள் ஜெ.ஜே.லியோன், ஞானசெளந்தரி வழங்கினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%