கடிதத்தின் பரிணாமம்

கடிதத்தின் பரிணாமம்

 📜


அன்றொரு நாள்...

இதயம் கனவுகளை 

காகிதத்தில் சொல்லி 

முகவரித் தேடி புறப்பட்டது.


சிறு வரிகளில்...

மைத்துளிகளில்...

எழுதுபவரின் உணர்வுகள்,

காத்திருப்பின் பரிமாறலில்

கடிதத்தின் காரணமாயின.


பிறகு...


காலம் மாற...

நகரங்கள் வளர...

மெதுவாக மாறியது 

தொழில்நுட்ப வளர்ச்சியோ,

மனிதனின் அவசரமோ

யார் அறிவார்?


முதலில்…

எழுத்து ஓவியமாக

அஞ்சலகப் பெட்டியில்...


பின்…

தொலைபேசியில் குரல் 

கடிதத்தை மெல்ல மறைத்தது.


இப்படியாக …

சுருங்கி சுருங்கி...


குறுஞ் செய்திகளில்

 மனத்தின் சொற்கள்

“சரி”, “ஹும்”, “ஒகே" - 

மூன்று சொற்களில் மறைந்தன!


இன்று…


இனிய வார்த்தைகளின்

நீளம் குறைந்து

இமோஜியின் முகத்தில்

எழுதப்படாத கடிதங்கள்

சேமிக்கப்படாத கோப்புகளாய்

மௌனத்தில் தொலைந்து போகின்றன.


ஆனால்…

பரிணாமம் மாறினாலும் 

இதயம் எழுதும் 

கடிதங்கள் எப்போதும் அழியாது.


ஏனெனில்...

அவை ...

கடிதமல்ல...

செய்தியல்ல...

இணையமல்ல...


அது மனித மனத்தின் 

நிழலாடும் நினைவுகள்


நா.பத்மாவதி

கொரட்டூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%