மண்ணைத் தொட்டு முத்தமிட ஆசைதான்.

மண்ணைத் தொட்டு முத்தமிட ஆசைதான்.



செய்யவில்லை வந்து விடுகிறேன்.


தேநீரின் கடைசி மிடறு. நாவறும்பை தொட்ட கணம் எழுகிறேன்.


உடன் பாதம் பற்றி வந்த எறும்பு

மண்ணின் கரம் பற்றி என்னை 

அறிமுகம் செய்விக்கிறது மண்ணிடம்.


மகிழ்ந்து சிரித்த மண் என்னைமடிமீது அமரசெய்து 

எறும்பிற்கு விடை கொடுத்து அனுப்புகிறது.


திரும்பிச் சிரித்த எறும்பு 

ஜாக்கிரதை சொல்லி விட்டுச் செல்கிறது.


கை கொடுத்து வரவேற்று அமரச்செய்த மண் 

என் நலன் விசாரித்துச் சிரிக்கிறது.


குவிந்து கிடந்த மண் மொத்தத்தையும்  

சென்ற வாரம்தான் பிரிந்து தெளிந்து தூவியிருந்தேன்.


சற்று பக்குவப்பட்டு பூத்துத் தெரிந்தது.


மழை பெய்தால் நன்றாக இருக்கும்.


பதினெட்டாம்பெருக்கிற்குள் பெய்துவிடும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.


பெய்தால் தேவலாம் பொய்த்தாலும் ஒன்றும் செய்வதற்கில்லை.


ஊன்ற நினைத்திருந்த விதைகள் 

மனதில் வரிசை கொண்டு|


மண்ணைப் பார்க்கிறேன் நான் 

என்னைப் பார்க்கிறது மண்.


மண், நான், நான், மண் என 

பிணை கொண்ட உறவு தவிர்த்து அவ்விடம் வேறெதுவும் அற்று.


வீட்டிற்குள் வருகிறேன். மண்ணை முத்தமிட்ட திருப்தியுடன்.



விமலன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%