கத்தியவாடி ஊராட்சியில் கால்நடை மருத்தகம் அமைக்க வேண்டும் கிராமசபா கூட்டத்தில் தீர்மானம்

ஆற்காடு,அக்.11, ஆற்காடு அடுத்த கத்தியவாடி ஊராட்சியில் கால்நடை மருத்தகம் அமைக்க வேண்டும் என்று கிராமசபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கத்தியவாடி ஊராட்சி சிறப்பு கிராம சபா கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்( பொறுப்பு) கே.பி. சங்கர் தலைமை வகித்தார். ஊராட்சி துணை தலைவர்( பொறுப்பு)ஜி.ராஜா , ஊராட்சி செயலாளர் வி.சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கிராம சபா கூட்டத்தில் ஊராட்சி உட்பட்ட ஜாதி பெயரில் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்றம் செய்வது, ஆதி திராவிடர் பகுதி சுடுகாடு அளவீடு செய்தரவேண்டுதல், அங்கன்வாடிக்கு சுற்றுசுவர் அமைக்கவேண்டும், கத்தியவாடி ஊராட்சியில் புதிய கால்நடை மருந்தகம் அமைக்கவேண்டும் மழைநீர் சேகரிப்பு அமைப்பது, டெங்கு தடுப்பு நடவடிக்கை ஏற்படுத்துவது ,பாசன ஏரி, குளம் ,குட்டைஉள்ளிட்டவற்றை கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர் கிருஷ்ணகுமார்,ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவிகுழுவினர் மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?