ரெயில்களில் பட்டாசுகள் எடுத்துச் சென்றால் அபராதம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை, அக். 11–
ரெரயில்களில் பட்டாசுகள் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என பயணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, அனைத்து பயணிகளும் ரெயில்களிலோ அல்லது ரெயில் நிலையங்களிலோ பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அல்லது வெடிப் பொருட்களை எடுத்துச் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று தெற்கு இரயில்வேயின் சென்னை கோட்டம் கேட்டுக்கிறது. இத்தகைய பொருட்கள் பயணிகளின் பாதுகாப்பு, இரயில்வே சொத்துக்கள் மற்றும் இரயில் சேவைகளின் சீரான இயக்கத்திற்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும்.
இந்த தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வது இந்திய இரயில்வே சட்டம், 1989-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், இத்தகைய மீறல்களால் ஏற்படும் இழப்பு, சேதம் அல்லது காயம் ஆகியவற்றுக்கு விதி மீறுபவர்களே பொறுப்பாவார்கள்.
பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பான மற்றும் அசம்பாவிதங்கள் இல்லாத பயணத்தை உறுதி செய்வதற்காக, சென்னை கோட்டம் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF), அரசு ரெயில்வே காவல் (GRP) மற்றும் நிலைய ஊழியர்கள் இரயில் நிலையங்களிலும், இரயில்களிலும் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முக்கிய மற்றும் புறநகர் நிலையங்களில் பயணிகளின் உடைமைகளை ஸ்கேன் செய்தல், திடீர் சோதனைகள், மோப்ப நாய் படைகளின் பயன்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளன.
தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் அனைத்து பயணிகளுக்கும் தனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அனைவரும் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பண்டிகைக் காலப் பயணத்தை மேற்கொள்ள பொதுமக்களின் முழு ஒத்துழைப்பையும் நாடுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?