வேலூர் அக்சிலியம் பெண்கள் கல்லூரி –நறுவீ மருத்துவமனை இணைந்து உலக சாதனைக்கான ரத்த பரிசோதனை முகாம்

வேலூர் அக்சிலியம் பெண்கள் கல்லூரி –நறுவீ மருத்துவமனை இணைந்து உலக சாதனைக்கான ரத்த பரிசோதனை முகாம்

வேலூர் அக்சிலியம் பெண்கள் கல்லூரி –நறுவீ மருத்துவமனை இணைந்து உலக சாதனைக்கான ரத்த பரிசோதனை முகாம்

கலெக்டர் சுப்புலெட்சுமி, ஜி.வி.சம்பத் துவக்கினர்


வேலூர், அக்.11-–


பெண்களிடையே ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்பாடி அக்சிலியம் பெண்கள் கல்லூரியுடன் வேலூர் நறுவீ மருத்துவமனை இணைந்து இளம்பெண்களுக்கான ரத்த பரிசோதனை முகாம் கல்லூரியில் நேற்று நடத்தியது. கல்லூரி முதல்வர் ஆரோக்கியஜெயசீலி தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் மேரிஜோஸ்பின்ராணி முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பி.ஆர்.அமுதா வரவேற்றார்.


சிறப்பு விருந்தினர்களாக வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி, நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினர்.


நாட்டில் 15 முதல் 24 வயதுள்ள 50 சதவிகித பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயால் பெண்களுக்கு கல்வி கற்பதிலும், பணி செய்வதிலும், மன நலத்தை காப்பதிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே, இளம் பெண்களிடையே ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நறுவீ மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவினர் பங்கேற்று 3,500 பேருக்கு ஒரே நேரத்தில் ரத்த சோகையை கண்டறியும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது உலக சாதனையாக கருதப்படுகிறது. இது இந்திய மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு இந்த சாதனை பதிவினை அந்த அமைப்பின் நடுவர் ஆர்.குருஅரிஷ் வழங்கினார்.


நிகழ்ச்சியில் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் சிறப்புரை ஆற்றுகையில், பெண்கள் உடல் நலத்துக்கு கேடான துரித உணவுகளை உட்கொள்வது, போதிய அளவு உணவு உட்கொள்ளாமல் இருப்பது ரத்த சோகையை உருவாக்கி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தடுக்கும். எனவே பெண்கள் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். குடும்பத்தின் ஆணிவேராக பெண்கள் விளங்குகின்றனர். பெண்களின் ஆரோக்கியமே குடும்பம் மற்றும் சமுதாயத்தின் ஆரோக்கியமாகும் என்றார்.


இதில், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பரணிதரன், மாவட்ட குழந்தைகள் நல திட்ட அலுவலர் சாந்தி பிரியதர்ஷினி, திருவள்ளுவர் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் எஸ்.விஜய்ஆன்ந்த், கல்லூரி துணை முதல்வர் அமலா வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஆர்.காயத்திரி நன்றி கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%