சமையல் கியாஸ் லாரிகள் வேலை நிறுத்தம்: தடைவிதிக்கக் கோரி ஐகோர்ட்டில் இந்தியன் ஆயில் நிறுவனம் மனு

சமையல் கியாஸ் லாரிகள் வேலை நிறுத்தம்: தடைவிதிக்கக் கோரி ஐகோர்ட்டில் இந்தியன் ஆயில் நிறுவனம் மனு


சென்னை, அக். 11–


சமையல் கியாஸ் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிங்களை உள்ளடக்கிய தென் மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.


தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், 1,500 லாரிகளுக்கு லோடு ஏற்ற அனுமதி கோரி, 3ஆம் நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் 5,500 சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாததால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.


இந்நிலையில் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் நடத்தி வரும் வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்கக் கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதுதொடர்பான அந்த மனுவில், “எல்.பி.ஜி. கியாஸ் என்பது அத்தியாவசிய பொருள், அதை விநியோகம் செய்யாமல் இருப்பது சட்டவிரோதம். எல்பிஜி விநியோகம் செய்ய டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%