கனடா திரையரங்குகள் மீது தாக்குதல்: இந்திய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தம்

கனடா திரையரங்குகள் மீது தாக்குதல்: இந்திய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தம்



ஒட்டாவா:

க​ன​டா​வில் இந்​திய திரைப்​படங்​களை திரை​யிடு​வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது. அதன்​தொடர்ச்​சி​யாக, திரையரங்​கு​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தால் ரிஷப் ஷெட்​டி​யின் காந்​தா​ரா: சாப்​டர் 1 உட்பட பல இந்​திய திரைப்​படங்​களை திரை​யிடு​வது உடனடி​யாக நிறுத்​தப்​பட்​டது. இது இந்​திய ரசிகர்​களிடையே ஏமாற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளதுடன், படத்​தின் வசூலும் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


இந்த தாக்​குதலுக்கு காலிஸ்​தான் தீவிர​வா​தி​கள் காரண​மாக இருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. கனடா​வின் ஒன்​டாரியோ மாகாணத்​தில் உள்ள திரையரங்​கு​கள் கடந்த ஒரு வாரத்​தில் இரண்டு வெவ்​வேறு சந்​தர்ப்​பங்​களில் தீவைப்பு மற்​றும் துப்​பாக்கி சூடு தாக்​குதல்​களுக்கு ஆளாகி​யுள்​ளது. இதையடுத்​து, அந்த திரையரங்​கு​களில் இந்​திய திரைப்​படங்​கள் திரை​யிடு​வது உடனடி​யாக நிறுத்​தப்​பட்​டுள்​ளன.


இதுகுறித்து காவல் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: ரிஷப் ஷெட்​டி​யின் காந்​தா​ரா: சாப்​டர் 1 மற்​றும் பவன் கல்​யாணின் தே கால் ஹிம் ஓஜி உள்​ளிட்ட இந்​திய திரைப்​படங்​கள் திரை​யிடப்​பட்​டிருந்த திரையரங்​கு​களை குறி​வைத்து செப்​டம்​பர் 25 மற்​றும் அக்​டோபர் 2 தேதி​களில் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. நள்​ளிர​வில் சொகுசுக் காரில் வந்த மர்​மநபர்​கள் திரையரங்​கு​களின் மீது தீ வைத்​தும், துப்​பாக்​கி​யால் சுட்​டும் தாக்​குதலில் ஈடு​பட்​டுள்​ளனர். இதனால் பொருட்​சேதம் ஏற்​பட்​டது. இந்த சம்​பவத்​தையடுத்து இந்​திய திரைப்​படங்​களை திரை​யிடு​வது நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு காவல் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.


இந்த தாக்​குதல் சம்​பவத்​தில் அப்​பகு​தி​யில் உள்ள காலிஸ்​தான் தீவிர​வா​தி​களுக்கு தொடர்பு இருக்​கலாம் என்று தகவலறிந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. ஆனால், காவல் துறை தரப்பு இதுகுறித்து உறு​திப்​படுத்​த​வில்​லை. விசா​ரணை நடை​பெற்று வரு​வ​தாக கூறப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%