கயத்தாரில் "கருப்பு காந்தி காமராஜர் " நினைவு நாள்

கயத்தாரில் "கருப்பு காந்தி காமராஜர் " நினைவு நாள்



திமுக பிரமுகர் குருராஜ் அஞ்சலி


மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு நாளை யொட்டி, கயத்தாரில் உள்ள மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் அலுவலகத்தில் திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் குருராஜ் வியாழக்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாரில் அமைந்துள்ள திமுக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் அலுவலகத்தில் தமிழகத்தில் கல்வி கண் திறந்த பெருந்தலைவர், கர்மவீரர், தமிழக முன்னாள் முதலமைச்சர், காமராஜர் அவர்களின் 50 ஆவது நினைவு தினத்தினை போற்றும் வகையில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தலைமையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 


பின்னர் செய்தியாளர்களிடம் குருராஜ் கூறுகையில்,


தமிழகத்தின் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினம் இன்று. ஒரே நேரத்தில் 16,000 பள்ளிக்கூடங்களை திறந்தவர். மதிய உணவுத்திட்டம் எனும் மகத்தான திட்டம் வகுத்தவர். அணைகள் கட்டி பயிர்செழிக்கச் செய்தவர். எட்டு பேர் கொண்டு சிறப்பான நிர்வாகம் வழங்கியவர். தலைவர்களை உருவாக்கிய பெருந்தலைவர் என்று புகழப்படுபவர் காமராஜர்.


அறிவினாற் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன்நோய் போல் போற்றாக்கடை என்ற வள்ளுவப் பேராசானின் வாய்மொழிக்கு உதாரணமாய் வாழ்ந்த மாமனிதர் காமராஜர். தமிழகத்திற்கு கல்விக்கண் தந்த பேராசான். இடைநிலைக் கல்வியைக் கூட எட்டாமல் நின்ற அம்மனிதன்தான், மாணவன் யாரும் வறுமையால் இடை நிற்றல் கூடாது என்று மதிய உணவுத் திட்டம் என்ற மகத்தான திட்டத்தை உருவாக்கினா‌ர். செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்புணர்ந்த காமராஜர், அறிவியல் தொழில்நுட்பப் பாடப்புத்தகங்களும் தமிழ் மொழியில் வெளிவரச் செய்த பெருமைக்குரியவர் என்றார்.


இந்நிகழ்வில் தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட பிரதிநிதி பவுன்ராஜ், ராஜாபுதுக்குடி பால்ராஜ், சதீஷ்குமார், கயத்தாறு ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் பரமசிவம், கயத்தாறு மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக


கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%