சின்ன புள்ள செல்ல புள்ள சிரிச்சு பேசும் அன்பு பிள்ளை நீதான்டி கண்ணு மான் இருக்கும் இங்கு மயிலிருக்கும் மகிழ்ச்சி தரும்
நன்னாடு தேன் இருக்கும் தினை இருக்கும் தெய்வம் வாழும் நன்னாடு மாதம் மும்மாரி பொழியும் மகராசன் தமிழ்நாடு மூவேந்தர் ஆண்டநாடு
இயல் இசை நாடக மின்னும் முத் தமிழ் வளர்ந்து வாழ்கின்ற நாடு தங்க தமிழ்நாடு தனிப்பெரும் நன் னாடு வஞ்சமில்லா நன்னாடு இது
தன்னிகரில்லாத நல்ல நாடு தான் உலகின் மூத்த குடி முதல் குடி ஆன குமரிக்கண்டம் தமிழரின் தலை சிறந்த நாகரிகம் அன்றும் இன்றும்
என்றும் விருந்து வைத்த நன்னாடு கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த நாடு கொடை கொடுத்த நாடு செந்நெல் விளைந்த நாடு நஞ்சையும் புஞ்சை
வழங்கிய விளை பொருளுக்கோ பஞ்சமில்லை காதலையும் வீரத்தை யும் இரு கண்களாக கொண்ட நாடு அக வாழ்வும் புற வாழ்வும் உள்ளது
பழக்கமும் வழக்கமும் பண்பாடு கொண்ட பழந்தமிழ் நாடு பாரினில் சிறந்த நாடு ஒழுக்கம் நிறைந்த நாடு பெண்களை தெய்வமாகவைத்தநாடு
இந்நாட்டை தெய்வத் தமிழ்நாடு என்று என்றென்றும் கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குவோம் நன்றி கூறுவோம் வாழ்வாங்கு வாழ்வோம் கரம் கூப்பி வழங்குவோம்

பேராசிரியர் முனைவர்
வேலாயுதம் பெரியசாமி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?