காலமும்... காயமும்..

காலமும்... காயமும்..



காயம் தந்த நீ...ஆகாயவெளியில் சிறகடிக்கிறாய்...


பிறிதொரு இடத்தில் இருந்து பீறீடும்... காதலில்...



சொக்கிக் கிடக்கிறாய்.... மாற்றான் தோட்டத்தில் மலர்கிறாய்...


பூச்செடிகள் இடம் மாறலாம்...தாங்கி வளர்த்த...மண் தான்... பாவம்...



வேர்கள் பிடுங்கிய காயத்தோடு.. சின்னாபின்னமாகி கிடக்கிறது...


பூச்செடியோ... வண்ணங்களில் வாழ்கிறது...


காயங்கள் உபயத்தில்...


பழகிப்போயிற்று ..வலி...


காலத்தின் கரிசனையால் ....ரசனையாகிப்போகிறது..... காயம் கூட...



தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%