
மதுரை கராத்தே பிரிவின் முக் கிய பட்டங்களில் ஒன் றான “இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸில்” இடம் பிடித்து மதுரையைச் சேர்ந்த 5 வயது சிறுமி பி.ஜே.சைனீகா ஸ்ரீ சாதனை படைத்துள்ளார். மதுரை சாய் நகர், காஞ்சரம்பேட்டை கிரீன்ஸ் பிரவுட் இன்டர்நேஷனல் பள்ளியில் இன்டர் நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கராத்தே சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், மதுரை தபால் தந்தி நகர் மீனாட்சி நகரில் அமைந்துள்ள ஜே.ஏ.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவி பி.ஜே. சைனீகா ஸ்ரீ, தனது பழைய சாதனையை அக்டோபர் 5 அன்று முறியடித்து 5 வயது 1 மாதம் 26 நாட்களில் கராத்தே பிளாக் பெல்ட் பெற்று இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த சாதனை தொடர்பாக பி.ஜே. சைனீகா ஸ்ரீ-யின் பெற்றோர் ஆர்.பழ னிச்சாமி, எஸ்.ஜெய ஸ்ரீ கூறுகையில், ஜே.ஏ.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமி மாஸ்டர் ஜே.அருள் பிரகாஷ் அவர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து சாதனையை நிகழ்த்த காரணமாக இருந்தார்” என மகிழ்ச்சியுடன் கூறினர். மேலும் பி.ஜே.சைனீகா ஸ்ரீ-க்கு இவர்களது பள்ளியின் தாளாளர் டாக்டர்.சக்தி ஐஸ்வர்யா, தலைமை ஆசிரியர் ஜி. பிரியா மற்றும் ஜே.ஏ.பி அகாடமியின் தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் ஜே.அருள்பிரகாஷ் ஆகியோரால் சான்றிதழ் மற்றும் ப்ளாக் பெல்ட் வழங்கப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?