
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற் கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடு கிறது. இந்தத் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி பெர்த்தில் அக்டோபர் 19ஆம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் பெர்த், அடிலெய்டு, சிட்னியிலும், டி-20 போட்டிகள் கான்பெரா, மெல்போர்ன், ஹூபர்ட், கோல்ட் ஹாஸ்ட், பிரிஸ்பேன் ஆகிய இடங்களிலும் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இரு அணிகளும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், 1 லட்சம் இருக்கைகள் கொண்ட மெல்போர்ன் மைதானத்தில் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறும் 2ஆவது டி-20 போட்டிக்கான 95,000 டிக்கெட்டுகள் விரைவாக விற்றுத்தீர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதே போல டி-20 தொடருக்கு மட்டும் 5 மைதானங்களில், வெறும் 5 நிமிடங்களில் 1,75,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?