
அமெரிக்காவின் டெக் சாஸ் மாகாணத்தில் நடைபெற்று வந்த “செக்மேட் (CHECKMATE)” செஸ் தொடரில், உலக சாம்பியனும், இந்திய வீரருமான குகேஷை (இந்திய அணி) அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நாகமுரா (அமெரிக்க அணி) வீழ்த்தினார். “குகேஷை வீழ்த்தியதை கொண் டாடுகிறேன்” என்ற பெயரில், ராஜா காயை (குகேஷ் விளையாடியது) ஹிகாரு நாகமுரா ரசிகர்களை நோக்கி தூக்கி எறிந்தார். இதுபோன்ற செயல் செஸ் விளையாட்டில் அரங்கேறியது கிடையாது. அதனால் ஹிகாருவின் செயல் செஸ் விளையாட்டில் மட்டு மின்றி ஒட்டுமொத்த விளையாட்டி லும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. எனினும் இது ஒரு கொண்டாட்டம் தானே தவிர சர்ச்சைக்குரிய விஷயம் இல்லை. செஸ் தொடரில் சர்வதேச ஆட்டங்களை போல, தற்போது உள்ளூர் தொடர்களும் நடைபெற்று வருகிறது. “செக்மேட் (CHECKMATE)” தொடர் கூட உள்ளூர் தொடர் தான். நாடுகளுக்கு இடையேயான ஆட்டம் இல்லை என்பதால் வீரர் - வீராங்க னைகள் ஜாலியாக வெற்றிகளை கொண்டாடி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?