சேத்தியாத்தோப்பு-ஜன03
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகிலுள்ள பூதங்குடி எஸ்.டி.சீயோன் மெட்ரிக் பள்ளியில்ஒக்கினாவா கோஜி ரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் பிளாக் பெல்ட் பெறுவதற்கான தகுதி தேர்வு தலைமை பயிற்சியாளர் சென்சாய்.வி. ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இத்தேர்வில் சுமார் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்ட கராத்தே மாணவர்கள் பங்கு பெற்றனர். இத்தேர்வில் கராத்தே மாணவர்களின் உடல் திறன்,பஞ்ச் மூமென்ட், கிக் மூமெண்ட்ஸ்டெக்னிக்கல்என பல்வேறு பிரிவுகளில் தலைமை பயிற்சியாளர் சென்சாய். வி. ரெங்கநாதன் மாணவர்களை ஆய்வு செய்து தேர்வு செய்தார். இத்தேர்வில் வடலூர் பகுதி மாணவர்கள் சரவணன்,கேசவ், அஸ்வின், சேத்தியாத்தோப்பு பகுதி மாணவர்கள் நிறைமதியன், பவித்ரன், ஆதித்யா,கார்த்திகா, அஜித்தா,திவ்யபாரதி, காட்டுமன்னார்கோயில் பகுதி மாணவர்கள் மோகனா, ரோகித், புவனகிரி பகுதி மாணவர்கள் ரூபிநாத், ஹரிதரன்,சிதம்பரம் பகுதி மாணவர்கள் சிவரஞ்சனி, ஆதிலட்சுமி,பவித்ரன் ஸ்ரீமுஷ்ணம் பகுதி மாணவர்கள் ஜெய் ஆகாஷ், கிஷோர், இளமாறன்,முகமத் அஜ்மல், சபரிவாசன்,விக்ரம்,
ஆதம்சோன், ஆண்டிமடம் பகுதி மாணவர்கள் வாசுதேவன், பிரித்திவி ஆதித்யா, சஞ்சித்தேவ், டைனோ மார்ஷல், ராஜசீமன்ஆகியோர் பிளாக் பெல்ட் பெறுவதற்கு தகுதி பெற்றனர். தகுதி பெற்ற மாணவர்களைஎஸ். டி.சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சாமுவேல் சுஜினும் பள்ளியின் நிர்வாக இயக்குனரும் குழந்தைகள் நல மருத்துவருமான தீபா சுஜின் ஆகியோர்
மாணவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள். தேர்வான மாணவர்களுக்கு வரும் பிப்ரவரியில் புவனகிரியில் நடைபெறும் மாநில அளவிலான கராத்தே போட்டியில் பிளாக் பெல்ட் சான்றிதழ் வழங்கப்படும் என்று கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் சென்சாய். வி.ரெங்கநாதன் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?