கரூர் சம்பவம் வதந்தி பரப்பிய யூடியூபர் கைது

கரூர் சம்பவம் வதந்தி பரப்பிய யூடியூபர் கைது


சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக பிரபல யூடி யூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் செவ்வாய்க்கிழமை அதி காலை கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலி னும் காவல்துறையினரும் எச்சரித்திருந்த நிலையில், ரெட் ஃபிக்ஸ் சேனலின் பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டை காவல்துறையினர் செவ்வாயன்று அதி காலை கைது செய்தனர். பெலிக்ஸ் ஜெரால்டிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசா ரணை நடைபெறுகிறது. வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%