த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு

சென்னை, அக். 1–
கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மதியழகனை நேற்றுமுன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், மதியழகனுக்கு கடந்த 2 நாட்களாக அடைக்கலம் கொடுத்ததாக தவெக கரூர் நகர பொறுப்பாளர் மாசி என்ற பவுன்ராஜையும் (34) கைது செய்தனர்.
இந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஏற்காட்டில் உள்ள மலை கிராமத்தில் ஆனந்த் தங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலைத் தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக காவல்துறை ஐஜி ஜோஷி நிர்மல் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஏற்காடு மட்டுமின்றி சென்னையிலும் ஆனந்தை தேடும் பணியைக் காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
இதனிடையே, புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?