கர்மா

கர்மா

 

சங்கரன் பானை செய்யும் தொழிலாளி. தினமும் ஏரிக்கரை ஓரத்தில் இருக்கும் மண்ணை பிசைந்து பானை செய்து விற்று பிழைப்பு நடத்துபவன். அவனது தாய், தந்தை மற்றும் இரண்டு தம்பிகள் என நான்கு பேரையும் காப்பாற்றும் பொறுப்பு அவனுக்கு இருந்தது வறுமையில் வாடும் குடும்பத்திற்காக தன்னால் முடிந்தவரை வேலை செய்து கிடைக்கும் வருவாயில் குடும்பம் நடத்தி வந்தான். ஒரு நாள் காலையில் பானை செய்ய கிளம்பியவனுக்கு உடல்நிலை சரியில்லை சோர்ந்து விழுந்து விட்டான் அன்று வருமானம் இல்லாததால் அனைவரும்பட்டினி அப்பொழுது அவனுடைய பெற்றோர்கள் தம்பிகளுக்கு வேலையை கற்றுக் கொடு, உனக்கும் உதவியாய் இருப்பார்கள் உனக்கு முடியாத போது அவர்கள் வேலை செய்து வருமானம் ஈட்டுவார்கள் என்றனர். ஆனால் தம்பிகளுக்கு இந்த கஷ்டமான வேலை செய்ய விருப்பமில்லை சாக்கு போக்கு சொல்லி ஏமாற்றி வந்தார்கள். சங்கரனே மீண்டும் வேலைக்கு சென்றான் மண்ணை பிசைந்து பானை செய்ய அவனால் முடியவில்லை அங்கேயே படுத்து தூங்கிவிட்டான். திடீரென்று எழுந்து பார்த்தான் மாலை ஆகிவிட்டது என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. அழுகையாக வந்தது கடவுளே ஏன் இப்படி சோதிக்கிறாய் ?என்று கடவுளிடம் மன்றாடினான் .பிசைந்த மண்ணை கோபுரமாக சேர்த்து லிங்கமாக வடித்தான். அதற்குள்ளே சிவபெருமானே தோன்றியது போல் ஒரு உணர்வு அவனுக்கு தோன்றியது . நான் இருக்கிறேன் மகனே கவலைப்படாதே என்று சிவபெருமான் கூறுவது போல் அவனுக்கு தோன்றியது. உடனே மீதம் உள்ள மண்ணை பிசைந்து பானை செய் என்று சிவபெருமான் கூறுவது போல் அவனுக்கு கேட்டது. உடனே அது போலவே பானைகள் செய்ய ஆரம்பித்தான் என்ன ஆச்சரியம் !! மள மள வென்று 100 பானைகள் செய்து முடித்தான். ஓரிரு நாட்களில் அத்தனையும் விற்று அதிக பணம் சம்பாதித்தான் .தினமும் வேலையை தொடங்குவதற்கு முன் அவன் செய்த சிவலிங்கத்தை நினைத்து பூ வைத்து பொட்டு வைத்து வழிபட ஆரம்பித்தான் பிறகு தான் வேலையை ஆரம்பிப்பான் .சில நாட்களிலேயே விதவிதமான பானைகள் மட்டும் இல்லாமல் புதுப்புது மண் பொம்மைகள் அழகாக செய்ய ஆரம்பித்தான் அதுக்கு வண்ணம் தீட்டினான் அவைகளையும் விற்றான் அதிக பணம் கிடைத்தது நாளடைவில் புதிய வீடு கட்டினான் .அவன் வழிபடும் சிவலிங்கத்தை சுற்றி கோவில் எழுப்பினான். பெரிய கடை ஒன்றைத் திறந்தான் .வியாபாரம் பெருகியது பக்கத்து ஊரில் இருப்பவர்கள் கூட வந்து சங்கரனிடம் பொருள்களை வாங்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். இதைப் பார்த்த தம்பிகள் நாங்களும் தொழிலில் உன்னுடன் வருகிறோம் எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள் என்றார்கள் .ஆனால்சங்கரன் கடையில் வியாபாரத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி விட்டான். அதிக பணம் சேர சேர அவனுக்கு கர்வம் வந்துவிட்டது யாரையும் மதிப்பதில்லை ஆட்களை வைத்து கூலி கொடுத்து வேலைகளை செய்ய ஆரம்பித்தான் முன்பு போல கடவுளையும் வழிபடுவதில்லை பேராசை அதிகமானதால் பொருளின் தரத்தை குறைத்து அதிக விலைக்கு விற்கத் தொடங்கினான் இதை மேலோகத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வதியும், பரமசிவனும் பேசிக்கொண்டார்கள். பார்வதி சிவபெருமானிடம் இந்த சங்கரனுக்கு நாம் எவ்வளவு கருணை காட்டி அவருடைய வாழ்க்கையை உயர்த்தினோம். ஆனால் அவன் செய்த காரியத்தை பார்த்தீர்களா ? என்றாள் அதற்கு சிவபெருமான் இதுதான் மனிதனின் புத்தி ,கஷ்டப்படும் போது நம்மிடம் வந்து முறையிடுவார்கள். ஆனால் பிரச்சனை நிறைவேறியதும் மாறி விடுவார்கள் ,நன்றி மறப்பார்கள், ஏன் நம்மையே மறந்து விடுவார்கள் .அவனது விதியை பார் என்றார். சிறிது நாட்கள் சென்றன அவனிடம் அதிகமான மக்கள் பானைகள் மற்றும் பொம்மைகள் வாங்குவதற்காக முன்பணம் கொடுத்து வைத்திருந்தார்கள். அது மழைக்காலம் என்பதால் திடீரென்று ஒரு நாள் அதிகமாக மழை பெய்ய ஆரம்பித்தது .வெள்ளம் பெருகியது ஏரிக்கரை உடைந்தது .பானை கடையில் உள்ளே வெள்ளம் புகுந்து அடித்துச் சென்றது மழையினால் கொஞ்சம் நாட்களுக்கு புது பொருள்களையும் செய்ய முடியவில்லை வியாபாரம் நடைபெறாததால் பெரும் நஷ்டம் ஆகியது .ஊர் மக்கள் ஒன்று கூடி சங்கரனிடம் தங்கள் பணத்தை கேட்டார்கள் அவனிடம் உள்ள பணத்தையும் தர மனமில்லாமல் ஏமாற்றிக் கொண்டே வந்தான் எல்லோரும் ஊர் தலைவரிடம் போய் முறையிட்டனர் .ஊர் தலைவரும் சங்கரனுடைய வீட்டிற்கு சென்று மக்களுக்கான இந்த பிரச்சனைக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ?என்று கேட்டார் .வீட்டை விற்றாவது அனைவருக்கும் பணத்தை கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டார். பக்கத்து ஊரில் இருந்து வந்த மக்கள் அவர்கள் வாங்கிச் சென்ற மண்பானைகள் சரியாக வேக வில்லை நீரில் கரைய ஆரம்பித்தது ஓட்டையாகிவிட்டது சாயம் போய் கரைந்து விட்டது எங்களை ஏமாற்றியதற்கு ஒரு நியாயம் வேண்டும் என்று அனைவரும் வந்து கேட்டார்கள் அவரிடம் கொடுப்பதற்கு காசு இல்லாததால் நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்பொழுதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது தான் உருவாக்கிய சிவலிங்கத்திடம் போய் முறையிடுவதற்காக ஓடினான் .கோவிலில் முழுவதும் தண்ணீர் புகுந்து லிங்கமும் கரைந்து விட்டது சங்கரன் தலையில் அடித்துக் கொண்டு அழுது புலம்பினான் அப்பொழுது இடி மின்னல் வந்தது அதற்கு நடுவில் இருந்து ஒரு அசரீரி குரல் ஒலித்தது "வினை விதைப்பவன் வினை அறுப்பான்" என்று கூறியது. அப்போதுதான் அவனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. தான் செய்த தவறை உணர்ந்து கடவுளிடம் மன்னிப்பு கேட்டான். கடவுளும் மன்னித்து அருளினார். பார்வதி சிவபெருமானிடம் ஏன் அவனை மன்னித்தீர்கள்? என்று கோபமாக கேட்டாள். அதற்கு சிவபெருமான் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்து விட்டது அதுவும் இல்லாமல் அவன் மனிதன் தவறு செய்பவன் நாம் அவனை மன்னித்து ஏற்றுக் கொள்வது தான் தெய்வத்தின் செயல் என்றார் .இருவரும் மேலே இருந்து சங்கரனை ஆசீர்வதித்தார்கள். 


எம் .எல் .பிரபா,

ஆதம்பாக்கம்,

சென்னை 88

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%