
நாம் உண்ணும் உணவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் தினசரி இட்லி தோசை சோறு போன்றவற்றை தவிர்க்க வேண்டும் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது பத்து நாட்களுக்கு ஒரு நாள் என எடுத்துக் கொள்ளலாம்
ரத்தத்தில் சர்க்கரையை அதிக அளவு சேர விடாத உணவுகளை உட்கொள்வது உடலுக்கு நல்லது.
ஆராய்ச்சியின் முடிவில் கொண்டைக்கடலை மிகவும் நல்லது இது சர்க்கரையை அளவை உடலில் சேர விடாது. இரண்டாவது இடத்தில் கோதுமை ரவை உப்புமா இடம்பெறுகிறது. இவை உணவு ஆராய்ச்சி மூலம் நமக்குத் தெரிய வருகிறது.
வேகவைத்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால் அடுத்த அரை மணி நேரத்தில் அதில் உள்ள மாவு சத்து முழுவதும் ரத்தத்தில் கலந்து விடும்
குறைந்த கிளைசீமிக் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முட்டை நிலக்கடலை பாதாம் சுண்டல்
காய்கறிகள் சூப் வகைகள் பல வகைகள் சிறந்த உணவாகும்.
காலை உணவில் இட்லியை காணவில்லை என தேடக்கூடாது.
வாரத்துக்கு ஒரு நாள் சாப்பிடலாம் அதுவும் வெள்ளை நிறத்தில் இல்லாமல் இருக்க வேண்டும்.
கம்பு சோளம் கேப்பை கோதுமை மாவில் இவற்றை இட்லி செய்து சாப்பிடலாம். மாப்பிள்ளை சம்பா அரிசியில் நிறைய சத்துக்கள் உள்ளன
இந்த வகை அரிசியில் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். மாதுளை சிவப்பு கொய்யா தக்காளி போன்றவை கேன்சரை தடுக்கும் ஆற்றல் உள்ளது. தினசரி உணவில் சிவப்பு நிற காய்கறிகள் பழங்கள் இடம்பெறுவது அவசியமாகும்
மாப்பிள்ளை சம்பா அரிசி கருப்பு கவுனி மூங்கில் அரிசி போன்றவற்றையும் கோதுமை
கேப்பை ரவை கம்பு சோளம் ஆகியவற்றையும் உணவாக தயாரித்து சாப்பிடுவது சிறந்தது
வெள்ளை உணவுப் பொருட்களான இட்லி தோசை சோறு இவற்றை தவிர்க்க வேண்டும்.
நம் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பது அவசியமாகும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் இதுவே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?