வாசகர் கடிதம் (P. கணபதி) 12.10.25

வாசகர் கடிதம் (P. கணபதி) 12.10.25


அன்பான வாசக சொந்தங்களுக்கு வணக்கம்.

இன்றைய நமது இ இதழில் வெளியாகியுள்ள திரு. வே. கல்யாண்குமார் அவர்களின் கவிதைகள் ஐந்தும் பஞ்சவர்ண ஓவியங்களாய் மிளிர்கின்றன. போரில்லா உலகம் வேண்டும் என்ற அகிலத்தின் ஆவலை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்."கனலே கவி எழுது" கவிதை என் நெஞ்சைத் தொட்டது. என் பள்ளித் தோழர்களில் 95 % பேர் மீனவ நண்பர்களே. மீனவ சகோதரர்களின் துயரம் கண்டு எழும் வருத்தம், சீற்றம், ஆதங்கம் அனைத்தும் சக உயிரின் மீது கொண்ட பரிவின் வெளிப்பாடாக அக்கவிதையில் அமைந்துள்ளது. கச்சத் தீவின் இழப்பை கச்சிதமாக உணர்த்தியுள்ள விதம் அருமை. பாராட்டுக்கள் சார். 


மதுர நாயகி - திருமதி. மீனா சேகர் அவர்களின் மெய்யெழுத்தில்லா கவிதை அற்புதமான முயற்சி. அவர் புதுமை படைக்கும் கவிதை நாயகி என்றால் மிகையில்லை. பேஷ்! வாழ்த்துக்கள் மேடம். திறமைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் focus light ஆக தமிழ்நாடு இ இதழ் ஆற்றும் பணிக்கு பாராட்டுக்கள். 


திருநள்ளாறு ஆலயச் சிறப்பு பற்றிய கட்டுரை சாரமான தகவல் தொகுப்பு. சனீஸ்வரன் என்பது சனைச்சரன் என்ற சொல்லின் மறுஉ என்பதையும் சுட்டி, விளக்கி யிருக்கலாமே. (சனைச்சரன் என்றால் மெதுவாகச் செல்பவன்)


வீணைகளின் வகைப் பட்டியல் சிறப்பான பதிவு. பாரம்பரிய இசைக் கருவிகள் ஒவ்வொன்றாக அருகி வரும் தற்காலச் சூழலில் இது போன்ற விபரத் தொகுப்புகள் உயிர்ப்பூட்டுவதாக அமையும்.


தண்டவாளங்களுக்கு அருகே குடை பிடிப்பதன் அபாயத்தை அறிவியல் அடிப்படையில் வெளிப்படுத்தியுள்ள செய்தி சிறந்த எச்சரிக்கைத் தகவல். நல்ல செய்திக்கு நன்றிகள். 


அதிபர் ட்ரம்ப் அவர்கள் சீனப் பொருட்களின் மீது 100 % வரி விதித்துள்ளது, 


கரூர் கூட்ட நெரிசல் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது போன்றவை கவனம் பெறும் செய்திகள். 


கடலூர் மாணவியின் வாகனம் மோதி தொழிலாளர் பலியானது மிக மிக துயரமான செய்தி. அதே நேரம் அந்த மாணவியின், அவரது தாயாரின் குற்ற உணர்வின் மனோநிலையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. 


தாலிபன் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்புக்கு பெண் ஊடகவியலாளர்கள் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. பிற ஆண் நிருபர்கள் இந்தச் சந்திப்பைப் புறக்கணித்திருக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். அதிலும் அர்த்தம் இருப்பதாகவே தோன்றுகிறது. 


மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி.


P. கணபதி

பாளையங்கோட்டை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%