
சேலம்:
சேலம் நான்கு ரோடு, அண்ணா பூங்கா அருகே கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வரும் கரு ணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டிருந்தது. மேலும், சிலைக்கான அடி பீடம் முழுவதும் கருப்பு பெயிண்ட் பூசப்பட்டிருந்தது. இதுகுறித்து திமுக மாநகரச் செயலாளர் ரகுபதி அஸ்தம் பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் நட வடிக்கை மேற்கொண்ட போலீசார், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், வயதான நபர் ஒருவர் கையில் பெயிண்ட் டாப்பாவுடன் சென்று, கருணாநிதி சிலையின் அருகில் உள்ள மின் இணைப்பை துண்டித்து, அங்கிருந்த 5 அடி நீள குச்சி யின் ஒரு பகுதியில் துணியை கட்டி, அதன்மூலம் பெயிண்டை எடுத்து கருணாநிதியின் சிலை மீது பூசியது தெரியவந்தது. பின்னர், சிலையின் கீழே உள்ள பீடத்திலும், பரவலாக பெயிண்ட்டை ஊற்றிவிட்டு சென்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கலைஞர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய மருத்துவரான விஸ்வநாதன் (77) என்பவரை போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். கலை ஞர் சிலையின் மீது கருப்பு மைய எதற்காக பூசினார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?