நியூசிலாந்து அணி வெற்றி: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது

நியூசிலாந்து அணி வெற்றி: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது

ஹராரே:

முத்தரப்பு லீக் போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி, 21 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.



ஜிம்பாப்வேயில், முத்தரப்பு 'டி-20' தொடர் நடக்கிறது. இதில் ஜிம்பாப்வே, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் பங்கேற்கின்றன. ஹராரேயில் நடந்த போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.



நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பெர்ட் (22) நல்ல துவக்கம் தந்தார். கான்வே (9), டேரில் மிட்செல் (5), மிட்செல் ஹே (2), ஜேம்ஸ் நீஷாம் (0) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய டிம் ராபின்சன் அரைசதம் விளாசினார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்தது. ராபின்சன் (75), பெவோன் ஜேக்கப்ஸ் (44) அவுட்டாகாமல் இருந்தனர்.



சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு லுவான் பிரிட்டோரியஸ் (27), ரீசா ஹென்டிரிக்ஸ் (16) ஆறுதல் தந்தனர். ஹெர்மன் (1), செனுரன் முத்துசாமி (7), கேப்டன் வான் டெர் துசென் (6) சோபிக்கவில்லை. டிவால்ட் பிரவிஸ் (35), ஜார்ஜ் லிண்டே (30) ஓரளவு கைகொடுத்தனர். மற்றவர்கள் ஏமாற்ற தென் ஆப்ரிக்க அணி 18.2 ஓவரில் 152 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்ரி, ஜேக்கப் டபி தலா 3 விக்கெட் சாய்த்தனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%