கலைஞர் பல்கலை’ மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல்

கலைஞர் பல்கலை’ மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல்



புதுடெல்லி: கும்​பகோணத்​தில் ‘கலைஞர் பல்​கலைக்​கழகம்’ உரு​வாக்​கு​வது தொடர்​பான மசோ​தாவை குடியரசுத் தலை​வருக்கு அனுப்​பி​ வைத்த ஆளுநரின் நடவடிக்​கைக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு ரிட் மனு தாக்​கல் செய்​துள்​ளது.

சட்​டப்​பேர​வை​யில் கடந்த மார்ச், ஏப்​ரல் மாதங்​களில் 2025-26-ம் நிதி ஆண்​டுக்​கான பட்​ஜெட் கூட்​டத்​தொடர் நடை​பெற்​றது. இதில், முன்​னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்​பகோணத்​தில் ‘கலைஞர் பல்​கலைக்​கழகம்’ உரு​வாக்​கு​வதற்​கான மசோதா தாக்​கல் செய்​து, நிறைவேற்​றப்​பட்​டது. தொடர்ந்​து, ஆளுநர் ஒப்​புதலுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது.

இந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​காமல் நிலு​வை​யில் வைத்​திருந்த ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, பின்​னர் குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்​காக அனுப்பி வைத்​தார். பல்​கலைக்​கழக மானியக் குழு (யுஜிசி) விதி​கள், துணைவேந்​தர் நியமன மசோதா உள்​ளிட்​டவை தொடர்​பாக பல்​வேறு வழக்​கு​கள் நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள நிலை​யில், குடியரசுத் தலை​வருக்கு இந்த மசோதா அனுப்பி வைக்​கப்​பட்​ட​தாக கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில், சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்றி அனுப்​பிய ‘கலைஞர் பல்​கலைக்​கழகம்’ தொடர்​பான மசோ​தாவை குடியரசுத் தலை​வருக்கு அனுப்​பி வைத்த ஆளுநர் ஆர்​.என்​.ர​வி​யின் நடவடிக்​கைக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் வழக்​கறிஞர் மிஷா ரோஹ்தகி ரிட் மனு தாக்​கல்​ செய்​துள்​ளார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%