காவல் துறை அனுமதி மறுத்ததால் பழனிசாமியின் பிரச்சார பயணம் 3-வது முறையாக மாற்றம்

காவல் துறை அனுமதி மறுத்ததால் பழனிசாமியின் பிரச்சார பயணம் 3-வது முறையாக மாற்றம்



நாமக்கல்: நாமக்​கல் மாவட்​டத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் பிரச்​சா​ரப் பயணம் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.


கடந்த 19, 20, 21-ம் தேதி​களில் நாமக்​கல் மாவட்​டத்​தில் பழனி​சாமி சுற்​றுப் பயணம் மேற்​கொள்​ளத் திட்​ட​மிட்​டு, கடந்த 19-ம் தேதி ராசிபுரம், சேந்​தமங்​கலம் தொகு​தி​களில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். கனமழை அறி​விப்பு காரண​மாக செப். 20, 21-ம் தேதி​களில் நடை​பெற​விருந்த பிரச்​சா​ரப் பயணம் அக்​.4, 5-ம் தேதி​களுக்கு மாற்​றம் செய்​யப்​பட்டது. பின்​னர், அக். 5, 6-ம் தேதி​களுக்கு மீண்​டும் மாற்​றம் செய்து அதி​முக தலைமை அறிவித்தது.


அதன்​படி இன்று திருச்​செங்​கோடு, குமார​பாளை​யம் தொகு​தியிலும், நாளை நாமக்​கல், பரமத்தி வேலூர் தொகு​தி​யிலும் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன.


ஆனால், பிரச்​சா​ரத்​துக்கு தேர்வு செய்​யப்​பட்ட 4 இடங்​களும் மாநில நெடுஞ்​சாலைக்கு உட்​பட்ட இடங்​கள் என்​ப​தால், சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வைக் காரணம் காட்டி பிரச்​சா​ரத்​துக்கு காவல் துறை அனு​மதி மறுத்​துள்​ளது. இதனால், பிரச்​சார தேதி 3-வது முறையாக மாற்​றம் செய்யப்பட்டுள்ளது.


அதன்​படி, வரும் 8-ம் தேதி திருச்​செங்​கோடு, குமார​பாளை​யத்​தி​லும், 9-ம் தேதி நாமக்​கல், பரமத்தி வேலூரிலும் பழனி​சாமி பிரச்​சா​ரம் மேற்கொள்கிறார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%