வீராணம் ஏரியில் ரூ.63.50 கோடி வெள்ள தடுப்பு பணிகள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்

வீராணம் ஏரியில் ரூ.63.50 கோடி வெள்ள தடுப்பு பணிகள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்



கடலூர், அக். 4–


கடலூர் மாவட்டம், லால்பேட்டை வீராணம் ஏரிப்பகுதியில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் விரிவான வெள்ள தடுப்பு பணியினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.


அப்போது அவர் கூறியதாவது:


முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடவும், தமிழ்நாடு அரசினால் அவ்வப்போது அறிமுகப்படுத்தும் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களை சென்றடையும் வகையிலும் பல்வேறு துறைகளின் மூலம் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


வீராணம் ஏரிக்கு கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த டிசம்பர் 2024இல் அதிகப்பட்சமாக 30,000 கனஅடி வெள்ளநீர் வந்தடைந்தது. இதனால் வீராணம் ஏரி நிரம்பிய நிலையில், கதவணைகளின் அளவை தாண்டி, திடீரென வெளியேறியதால், வடிகால் வாய்க்கால் கரைகள் சேதமடைந்து அருகிலுள்ள கிராமங்களில் வெள்ள நீர் உட்புகுந்து அதிகப்படியான சேதம் ஏற்பட்டது. இவ்வாறான எதிர்பாராவிதமான வெள்ள சேதங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, முதலமைச்சர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது வீராணம் ஏரிக்கு ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் விரிவான வெள்ள தடுப்பு பணி மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்டார்.


அதனடிப்படையில் இன்றைய தினம், ரூ.29.00 கோடி மதிப்பீட்டில் வீராணம் ஏரியில் கூடுதல் நீர்போக்கி அமைத்தல் மற்றும் பாழ்வாய்க்கால் வடிகால் வாய்க்கால்களை மேம்படுத்தும் பணிகள், ரூ.13.50 கோடி மதிப்பீட்டில் வீராணம் ஏரியின் உபரி நீர்போக்கிகள் மற்றும் வடவாறு உள்வாங்கி மதகுகளில் உள்ள சேதமடைந்த இரும்பு கதவுப்பலகை மற்றும் மின்தூக்கி சீரமைக்கும் பணிகள், ரூ.21.00 கோடி மதிப்பீட்டில் வீராணம் நீர்தேக்க பிரதான உபரி வாய்க்காலான வெள்ளியங்கால் ஓடை மற்றும் மணவாய்க்கால்களை புனரமைத்து மேம்படுத்துதல் மற்றும் வெள்ள தடுப்புசுவர் கட்டும் பணி பணிகளையும், துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரியை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் வகையில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப் படவுள்ளது, இதன் மூலம் இப்பகுதி வளர்ச்சி ஏற்படுவதுடன் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%