
பாபநாசம், அக்.14:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, அய்யம்பேட்டையை அடுத்த சக்கராப்பள்ளி ரஜியா மெடிக்கல் சென்டரில் கல்லீரல் நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பாபநாசம் டி.எஸ்.பி முருகவேலு முகாமை தொடங்கி வைத்தார். இதில், பாபநாசம் லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர்கள் ஆறுமுகம், சம்பந்தம், மாநில நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லீரல் நோய் பற்றிய விழிப்புணர்வை மருத்துவமனையின் நிறுவனர், சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் ரஜாக் ஜானி அளித்தார். சிறுநீரகவியல் நிபுணர் முஹம்மது அஸ்லம், அவசர நோய் சிகிச்சை நிபுணர் அர்ஷத் அஹமத் உள்பட பலர் பங்கேற்றனர்.
இல்லம் தேடி கல்வித் திட்டம்: தன்னார்வலர்களுக்கு பயிற்சி
தஞ்சாவூர், அக். 14:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தைச் சேர்ந்த, இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி சனிக்கிழமை பேராவூரணி வட்டார வள மைய அலுவலகத்தில் நடைபெற்றது. பேராவூரணி வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோகுல கிருஷ்ணன் பயிற்சிக்கு தலைமை வகித்தார். பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் காஜா முகைதீன் கருத்தாளராக பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில், பேராவூரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுநர் ஷாஜிதா பானு நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?