நரகாசுரன் கதை 'பாகவதம்' என்ற புராணத்தின் ஒரு பகுதியில் வருகிறது.
தமிழ் சினிமாவின் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' 1931 ஆம் வருடம் தீபாவளியன்று வெளிவந்தது.
நரகாசுரனுடைய சேனாதிபதியான 'முரன்' என்பவனை வதைத்ததாலேயே கண்ணனுக்கு 'முராரி' என்ற பெயரும் வந்தது.
1942ஆம் வருட தீபாவளி நள்ளிரவில்தான் தேசபக்தர் தீரர் 'ஜெயபிரகாஷ் நாராயணன்' நண்பர்களுடன் 'ஹசாரிபாக்' சிறையில் இருந்து சுவர் ஏறிக்குதித்து தப்பினார்.
தீபாவளியைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்ற முதல் தமிழ் திரைப்படம் 1959-ல் வெளிவந்த 'கல்யாணபரிசு'.
சங்க காலம் முதல் பாரதி காலம்வரை தீபாவளியை பற்றிய பாடல்கள் எதுவும் தமிழில் இல்லை.
இந்து மதத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவில் தோன்றிய ஜைன, புத்த, சீக்கிய மதங்களுக்கும் உரிய பண்டிகை தீபாவளியாகும்.
குஜராத் மாநிலத்தில் தீபாவளியன்றுதான் வியாபாரிகள் புதுக்கணக்கு தொடங்குகிறார்கள்.
சோழர்கள் காலம் வரை தமிழகத்தில் தீபாவளி கொண்டாடப்படவில்லை.
வட மாநிலங்களில் சில இடங்களில் தீபாவளியன்று ஆந்தை தங்கள் வீட்டுக் கூரையில் வந்து அமர்ந்தால், அதனை அதிர்ஷ்டமாகக் கருதுகின்றனர்.
'ஹரிதாஸ்' என்ற திரைப்படம் 1944 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்து, தொடர்ந்து 1945, 1946 ஆம் ஆண்டு தீபாவளிகளையும் கடந்து ஓடி மூன்று தீபாவளிகளைக் கண்டது.
சீனர்கள்தான் முதன் முதலில் வெடிமருந்தையும், பட்டாசுகளையும் கண்டுபிடித்தார்கள்.
'டபாஸ்' என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்துதான் பட்டாசு என்னும் தமிழ் சொல் வந்தது.
நேபாள நாட்டில் 'பஞ்சக்' என்ற பெயரில் தீபாவளியை ஐந்துநாட்கள் கொண்டாடுகிறார்கள்.
தீபாவளி, ஓணம் ஆகிய இரண்டு பண்டிகைகளும் திருமாலின் அவதாரச் சிறப்பைக் கொண்டாடும் பண்டிகைகளாகும்.
சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் தொழில் 1923- ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
வாணவெடிகளில் 'பேரியம்' உப்பு கலக்கப்பட்டிருந்தால் பச்சை நிறமாகவும், 'ஸ்ட்ரான்சியம்' உப்பு கலக்கப்பட்டிருந்தால் சிவப்பு நிறமாகவும், 'சோடியம்' உப்பு கலக்கப்பட்டிருந்தால் மஞ்சள் நிறமாகவும் எரியும்.
சாஸ்திர விதிப்படி ஆலய வழிப்பாட்டுக்கான தீபங்கள் 16 வகைப்படும்.
அணுகுண்டு என்ற வெடி இரண்டாவது உலகயுத்தம் முடிந்தபிறகு சிவகாசியில் அறிமுகமாகியது.
இந்தியாவில் முதன் முதலாக போரில் ராக்கெட் வெடிகளை பயன்படுத்திய மன்னன் திப்பு சுல்தான்.
ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
சின்னஞ்சிறுகோபு,
சென்னை.