கல்விக்கடன் வழங்கும் முகாம் 152 மாணவர்களுக்கு ரூ.8.76 கோடி கடனுதவி
Nov 16 2025
76
விருதுநகரில் கல்லூரி மாணவ, மாணவி யர்களுக்கு சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலை மையில் நடைபெற்றது. இதில், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கல்விக்கடன் பெறுவதில் மாணவர்கள், பெற்றோர்களின் சந்தே கங்கள் நிவர்த்தி செய்யப்பட்டது. மேலும், விண்ணப்பித்த தகுதியான மாணவர்களுக்கு 20 நாட்களுக்குள் கல்விக் கடன் வழங்கப்படும். நடப்பு நிதி ஆண்டில் கல்விக்கடன் இலக்காக ரூ.38.11 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம் பர்-2025 வரை 576 மாணவர்களுக்கு ரூ. 27.61 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 152 மாணவர்களுக்கு ரூ.8.76 கோடி கல்விக்கடன் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சி யர் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சு.பாண்டிச்செல்வன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?