
ஆரம்பப்பள்ளியில்
சேர்க்கைக்கு
நீண்ட வரிசையில்
காத்திருக்கவில்லை.
அம்மாவும்
அப்பாவும்
அருகினில்
வந்தமரவில்லை.
அரிசியில் 'அ'
எழுதவுமில்லை.
ஆசிரியர்
கரும்பலகையை
நிரப்ப நிரப்ப
மாணவராகிய
நாங்கள்
பலப்பத்தில்
இயல்பாகவே
விளம்பினோம்.
பக்குவமாய்
பல பாடங்கள்
படித்து தேர்ந்தோம்.
குறிக்கோளான
அரசுப்பணியை
அடைந்தோம்.
குறிப்பிட்ட
சம்பிரதாயங்கள்
செய்தால் தான்
கிட்டும் சாதனை
என்பதில்லை.
தடைக்கற்கள்
முட்டும்
பாதையில்லாமல்
எதுவுமில்லை.
தன்னிலையறிந்து
தன்னம்பிக்கையுடன்
தவறாமல்
முயற்சிப்போர்க்கு
சரஸ்வதியும்
இலக்குமியும்
பரிபூரணமாக
அருள்பாலிப்பார்கள்..!
ஈ.கார்த்திகேயன்,
அறமத்தாபாளையம்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%