
" கருத்து குவிந்தது
மேகம் இருள் சூழ
குளிர்ந்த காற்று
தொட்டு வருடியது
மேனியை .. "
" சில்லென சினுங்கியது
வானம் மெல்லிய
தூரலின் தோரணம்
பூக்களின் நறுமணம்
போல் மண்வாசனை ..."
வாத்தியங்கள்
இசைத்தது போல்
இடியின் ஓசை ..."
கொட்டியது மழை
இசைக் கச்சேரி
ஓயாமல் இசைத்தது
போல ..."
மின் விளக்கு
அலங்காரம் அகல்
விளக்கு ஜொலிப்பு
போல மின்னியது
வானம் மின்னல்
அலையால் ....."
குளிர்ந்தது பூமி
மலர்ந்தது மனம்
இனித்தது இதயம்
பெருகியது ஆற்றில்
நீர் ..."
பசுமை விரிந்தது
செடிகள் மரங்கள்
கொடிகள் துளிர்த்தது ..."
ஆனந்தம் எங்கும்
மகிழ்ச்சி மழை
என்றால் கரையும்
குழந்தைகள் மனம் ..."
- சீர்காழி . ஆர். சீதாராமன்,
9842371679 .
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?