
வீட்டில் சிறு மாறாமத்து பணிக்காக
பணியாளரை தேடி முக்குக்கு சென்றேன்....
நூற்றில் 50 பேர் வட இந்திய தொழிலாளர்கள் கையில் கரண்டியுடன் இருந்தனர்....
அவர்களை அழைக்க மனமில்லாமல் நம் உள்ளூர் ஆளிடமே கேட்டேன்....
"மராமத்து வேலை கேஸா ... அதெல்லாம் ஆவாது சார்...ஒரு நாள் கூலிக்குனா வாரேன்...கூட ஒரு சித்தாளும் வேணும்...நம்ம ஒருத்தரால மண்ணு சுமக்கிறது சிமெண்ட் அடிக்கிற வேலை பண்ண முடியாது... சின்ன வேலை எல்லாம் நமக்கு சரிப்பட்டும் வராது ஒரு நாள் கூலி ஆயிரம் குடுக்குறியா சொல்லு..சாரு வாரேன்... !"
மீறி போனால் இரண்டு மூன்று மணி நேரம் வேலைக்கு ஒரு நாள் கூலி கேட்பது அநியாயமாக தெரிய...
வடக்கத்திய இளைஞனை அழைத்தேன்...
"என்னா வேலை ஜி... !"
சொன்னேன்...
"நானே பாத்துக்குறேன் சார். நீங்க ஏதோ போட்டு கொடுங்க... !"
என் டூவீலரில் அழைத்து வந்து...
பணியை செய்ய வைத்தேன் சரியாக மூன்று மணி நேரத்தில் மராமத்து பணிகள் முடிவடைந்தன....
அனைத்து வேலைகளும் அவனாகவே இழுத்து போட்டு செய்தான்...
ஐநூறு ரூபாய் கொடுத்ததில் ஆனந்தம் கொண்டான்...
அவனை மீண்டும் முக்கில் கொண்டு போய் டூவீலரில் விட்டேன்...
என்னிடம் ஒரு நாள் கூலி பேரம் பேசிய நம்மூர் காரர் இன்னும் மூளையில் அமர்ந்திருந்தார்...
அவரைப் போல் உள்ளூர் ஆட்கள் பலரும் அமர்ந்திருந்தனர்...
வடக்கத்திய இளைஞர்களின் ஆக்கிரமிப்பின் காரணம் எனக்கு இப்போது புரிந்தது... !
----------------------------------------
எம்.பி.தினேஷ்
கோவை - 25
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?