திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் அருகே உள்ள பெருமாள்கோயில் வலசை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த சண்முகம், புதன்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றி ருந்தார். வேலை முடிந்து மதியம் 3 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.15,000 பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில் கள்ளி மந்தயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்மநபர் களைத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%