" வாடா பேராண்டி !" கல்லூரி யிலிருந்து வந்த முருகனை வரவேற்றார் பாட்டி கனகா.
" என்ன பாட்டி , எப்படி இருக்கீங்க ?" ஷூக்களை அவிழ்த்த முருகன் பையை மேஜைமேல் வைத்தான்.
" என்னடா இது ! காலையில காலேஜ்
போனபோதுதானே விசாரிச்சே. இப்போசாயந்திரமும் விசாரிக்குறே ?"
முருகன் புன்சிரிப்பொன்றை உதிர்த்
தான். " பாட்டி , பெரியவங்கள பார்த் தால் உடனே நலம் விசாரிக்கணும் பாங்க. அதுதான்..."
" ஓஹோ...அப்படின்னா நீ ' பாட்டி டிஃபன் சாப்பிட்டீங்களா. காஃபி குடிச்சீங்களா. அப்புறம் சாப்பாடு சாப்பிட்டீங்களா ' அப்படின்னு கேட்டிருக்க வேண்டியதுதானே?"
" பாட்டி , நான் கேட்ட கேள்வியில இதெல்லாம் அடக்கம் !"
" அப்படியா சரி. நீ ஒண்ணு பண்ணு. இனிமேல் சாதத்துல சாம்பார், ரஸம், மோர், காய், ஊறுகாய் எல்லாத்தை யும் ஒண்ணா கலந்து சாப்பிடு ."
" ஏன் ?"
" உன் கேள்வி மாதிரியே சாப்பாடும் இருக்கும்."
" பாட்டி , உங்களுக்கு குசும்பு ரொம் பவே ஜாஸ்தி. உங்களோட ரவுசு தாங்காமல்தான் தாத்தா இந்த உலக த்தைவிட்டே போயிட்டாரு ."
" ஆமா..ரொம்ப சின்ன வயசு பாரு. எண்பத்திரெண்டு வயசில போய் சேர்ந்தாரு. ஆனா உங்க தாத்தா சின்ன வயசில பண்ண ரவுசு இருக்கே...அப்பப்பா !" என்றதும் " பாட்டி ..பாட்டி ப்ளீஸ் அது என்ன சொல்லுங்களேன்." கெஞ்சியபடி கட்டிலில் பாட்டி பக்கத்தில் அமர்ந் தான் முருகன்.
" அப்போ நானும் உங்க தாத்தாவும் ஒரே பள்ளிக்கூடத்துல படிச்சிக் கிட்டிருந்தோம்.
" கோ எஜூகேஷனா ?"
" ஆமாம். நான் அஞ்சாம் க்ளாஸ். உங்க தாத்தா ஏழாம் க்ளாஸ். பார்க்க ஜோராயிருப்பார். நானும் சுமாரா யிருப்பேன்.தாத்தா எல்லா பாடத் துலயும் அதிக மார்க் எடுத்து முதல் ரேங்க் எடுப்பார். நானும்முதல் ரேங்க்.
" இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து புன்னகை செய்வோம். சில நாள் கழிச்சி பேச ஆரம்பிச்சோம். அப்புறம் ஒருநாள்வெட்கத்தை விட்டு தாத்தாவை நேசிப்பதாக நான் சொன்னேன். உடனே அவர்என்ன செஞ்சார் தெரியுமா ? தன் டிரவு
சர்லேர்ந்து ஒரு கம்மர்கட் எடுத்து பாதி கடிச்சிட்டு மீதியை என்னிடம் நீட்டினார்.
" நான் ஒண்ணும் புரியாமல் தெகைச்சுப் போய் நின்னேன். ' ம். இந்தா. காக்காக்கடி கம்மர்கட். இதை வாங்கி நீ சாப்பிட்டால் உன் காதலை நான் ஏத்துக்கறேன்.இல்லேன்னா நடையைக்கட்டு ' அப்படின்னார்.
" தர்மசங்கடமான நிலைமை. எச்சில் பட்ட கம்மர்கட்டை எப்படி வாயில் போடறது... நேசிக்குறேன்னு சொன் னதுக்கு இந்த தண்டனையா..நான் குழம்பினேன்.
" அவர் விடவில்லை..' என்ன யோ சிக்கிறே. இன்னும் அஞ்சு வினாடி தான். அதுக்குள்ள நீ இதை எடுத்து சாப்பிடல்லேன்னா நான் போய்க் கிட்டே இருப்பேன்.ஒண்ணு , ரெண்டு, மூணு, நாலு , ' அவர் அஞ்சு என்பத ற்குள் நான் சட்டென கம்மர்கட்டை எடுத்து வாயில் போட்டுக்கிட்டேன்.
" ஆனால் பேராண்டி , சத்தியமா சொல்றேன். அன்னிக்குவெறுப்போடு நான் சாப்பிட்ட கம்மர்கட் இனிக்க வில்லை.கசந்தது. மனுஷனின் மிரட்டலுக்கு அடி பணிய வேண்டி யதாப் போச்சு.!"
" பாட்டி , ஆரம்பமே ரொமான்ஸா இரு
க்கே !" என்றான் முருகன். " மேற்கொ
ண்டு சொல்லுங்க ."
" ஆனால் ஆரம்பத்திலே எனக்கு பிடிக்காமல் போனாலும் அதன்பிறகு எனக்கு காக்கா கடி ரொம்பவே பிடிச்சுப் போயிருந்தது. பிஸ்கட் , ரொட்டி இதெல்லாம்கூட காக்கா கடி யாகத்தான் நான்சாப் பிட்டேன்.
அதுக்கப்புறம் நாஎஸ்.எஸ்.எல்.ஸி.முடி
ச்சிட்டு வீட்டிலயே இருந்திட்டேன். தாத்தா காலேஜூல சேர்ந்து டிகிரி முடிச்சு ஒருவேலையில் சேர்ந்தார்.
எங்க ரெண்டுபேர் வீட்டிலேயும் சம்மதி
ச்சு நாங்க கல்யாணம் செய்துகிட் டோம்."
" பாட்டி வெரி இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி ! சரி. காக்கா கடி விஷயம் தொடர்ந் ததா.?" ஆர்வம் தாளாமல் முருகன் கேட்க
" முருகா , இது ஒன்ஸைடு காக்கா கடி "
வேதனையுடன் கூறினார் கனகா.
" அப்படின்னா?"
" கிட்டத்தட்ட நிறைய தடவை தாத்தா
வோட காக்கா கடியைதான் நான் சாப்பிட்டிருக்கேன். ஒருநாள் நான் சாப்பிட்டவடையில் பாதியை அவரிடம் நீட்டினேன்.என்ன செய்யப்போகிறார் ன்னு ஆவல் !மனுஷன் ஏதோ ஒரு வேண்டாத பொருளைப் பார்ப்பது போல் பார்த்துட்டு இடத்தை காலி செய்தார். நான் வடையை
தூக்கி கடாசினேன். அன்னிக்கே காக்கா கடி சமாதிக்குப் போனது !" பாட்டி வேதனையோடு கூறி முடித்தார் .!

வி.கே.லக்ஷ்மிநாராயணன்