ஐ.நா. அறிக்கை
ஜெனீவா,நவ.29- ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா அவையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக் குழுவின் அமர்வில், இஸ்ரே லின் ராணுவத் தாக்குதல்களால் பாலஸ்தீனர்கள் சந்தித்து வரும் பொ ருளாதார மற்றும் மனிதாபிமானப் பேரழிவை அம்பலப்படுத்தும் அறிக் கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மனிதாபிமான நெருக்கடி இந்த அறிக்கையின்படி, இஸ்ரே லின் ராணுவத் தாக்குதல்களும் கட்டுப்பாடுகளும் காசாவில் முன்னெப் போதும் இல்லாத மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளன. மேலும், பாலஸ்தீனத்தின் மனித வளர்ச்சி 69 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது. 22 மாதப் போரின் காரணமாக, காசாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மிகவும் மோசமான நிலை யிலும், 10.7 லட்சம் பேர் (54%) அவசர நிலையிலும், 3.96 லட்சம் பேர் (20%) நெருக்கடியான நிலையிலும் உள்ள னர். உயிரிழப்புகளும் உள்கட்டமைப்பு அழிவும் 2025 செப்டம்பர் 3 நிலவரப்படி, 18,400க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 63,746க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 1,61,245க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயம டைந்துள்ளனர். மேலும், 531 ஐ.நா. உதவிக் களப்பணியாளர்கள், 1,590 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 247 பத்திரிகையாளர்களும் கொல்லப் பட்டுள்ளனர். காசா முழுவதும் உள்ள உள்கட்ட மைப்புகள் முற்றிலுமாகச் சிதைக் கப்பட்டு விட்டன. சுமார் 92 சதவீத வீடுகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. இதனால், 14 லட்சம் மக்கள் தங்குமிடம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தேவைப்படும் அவசர நிலையில் உள்ளனர். சுகாதார சேவைகள் அழிந்து, 50 சதவீத மருத்துவமனைகள் மற்றும் 40 சதவீத ஆரம்ப சுகாதார மையங்கள் மட்டுமே செயல்படுகின்றன. மருந்துப் பொருட்கள், பணியாளர்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. கல்வி மற்றும் பொருளாதாரம் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தை களும், 87,000 பல்கலைக்கழக மாண வர்களும் கல்வியை அணுக முடிய வில்லை. 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மனநலம் மற்றும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் அவசர நிலையில் உள்ளனர். 2007-2022 காலகட்டத்தில் காசா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியானது மக்கள் தொகை அதிகரிப்பைக் காட்டிலும் குறைவாக இருந்ததால், ஒரு நபருக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 37 சதவீதம் குறைந்துள்ளது. 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் தொடங்கிய போரானது காசா வின் பொருளாதார அடித்தளங்களை அழித்து, அதை முழுமையான பேரழி வுக்குள் தள்ளியுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.