காட்பாடி கழிஞ்சூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா!!
Nov 09 2025
15
வேலூர், நவ.10-
வேலூர் மாவட்டம், கழிஞ்சூர் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த ஆலயம் அண்மையில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 12 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தை பாலாலயம் செய்து மீண்டும் புதுப்பித்து இந்த ஆலயத்தை நிர்மாணித்தனர். இந்நிலையில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் வளாகத்தில் தணிகைவேல் ஐயர் தலைமையிலான குழுவினர் ஸ்ரீ செல்வவிநாயகருக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் அடங்கிய பொருட்களுடன் சிறப்பு அபிஷேகத்தை நடத்தினர். இதைய டுத்து ஸ்ரீ செல்வ விநாயகர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் அர்ச்சகர் தணிகை வேல் ஐயர் செய்திருந்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?