காதி மூலம் கிடைக்கும் லாபம் நேரடியாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கிறது: அமித்ஷா பெருமிதம்
ஹரியானா அக்.5
ஹரியானாவின்ரோஹ்தக்கில் உள்ள மகர்ஷி தயானந்த் பல்கலைக்கழக (MDU) வளாகத்தில் அக்டோபர் 3 இல் நடைபெற்ற “காதி கரிகர் மஹோத்சவ்' நிகழ்வில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித்ஷாதலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, காதி கைவினைஞர்களுக்கு இயந்திரங்கள் மற்றும் கருவிப் பெட்டிகளை வழங்கினார்.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ்பயனாளிகளுக்கு மார்ஜின் பண மானியங்களை வழங்கினார். புதியதொழிற்கூடங்களை டிஜிட்டல் முறையில் திறந்து வைத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல
திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஹரியானா முதல்வர் நயாப் சைனி, காதிமற்றும்கிராமத்தொழில்கள் ஆணையத்தின் (KVIC) தலைவர் மனோஜ் குமார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, சுதந்திரப் போராட்டத்தின் போது, வறுமையை ஒழிக்கவும், நாட்டைத் தன்னிறைவடையச் செய்யவும், சுதேசி என்ற கருத்தை
ஊக்குவிக்கவும், விடுதலை அடையவும் மகாத்மா காந்தி காதியைப் பயன்படுத்தினார் என்று கூறினார். நாடுமுழுவதும்
உள்ள லட்சக்கணக்கான நெசவாளர்களின் வாழ்க்கையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய காதி என்ற தாரகமந்திரம், நமது நாட்டு மக்களுக்கும் சுதந்திர இயக்கத்திற்கும் ஒரு அடித்தளமாக மாறியது என்று அவர் தெரிவித்தார்.
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, காதியை மீண்டும் உயிர்ப்பிக்கத் தீர்மானித்தார், என்று உள்துறை
அமைச்சர் குறிப்பிட்டார். பிரதமரான பிறகு, மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் காதியைப் பயன்படுத்துமாறு நாட்டு மக்களை ஊக்குவித்தார். 2014 – 15 ஆம் ஆண்டில், 33,000 கோடி ரூபாயாக இருந்த காதி மற்றும் கிராமத்தொழில்களின்வருவாய், இப்போது 1.70 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில்,கேவிஐசி மதுரை மண்டல அலுவலகத்தின் கீழ் தூத்துக்குடி சர்வோதய சங்கம் மற்றும் இரணியல்
சர்வோதய சங்க வளாகத்தில் புதிய காதிபவன் கட்டிடங்களை உள்துறை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில்,
கே.வி.ஐ.சி தலைவர் மனோஜ் குமார், உள்துறை அமைச்சர், மற்றும் பிற விருந்தினர்களுக்கு காதி ராட்டையினை நினைவுப்
பரிசாக வழங்கினார். ரூப் ராஷி தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.ஐ.சி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சகம், கே.வி.ஐ.சி மற்றும் உள்ளூர் நிர்வாகத்தைச் சேர்ந்த ஏராளமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஏராளமான காதி கைவினைஞர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.