காரைக்காலில் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டை திருடப்படும் அபாயம்
Jan 08 2026
14
காரைக்கால், ஜன.
ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடும் பருவம் நெருங்கி வரும் வேளையில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் குஞ்சு பொரிப்பகங்கள் உள்ளிட்ட முறை யான பாதுகாப்பு கட்டமைப்புகள் இல்லாததைச் சூழலியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் ஆமை முட்டைகள் திருடப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது. ‘நியூஸ்’ (NEWS) என்ற தன்னார்வ அமைப்பு, கடந்த 2024 டிசம்பர் முதல் 2025 மார்ச் வரையிலான காலத்தில் மண்ட பத்தூர் மற்றும் வாஞ்சூர் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 3,000 ஒலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை ஆவணப்படுத்தி யுள்ளது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் பொரிப்ப கங்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது போன்று காரைக்காலில் இல்லாத தால் அங்கு ஆலிவ் ரிட்லி ஆமைகள் தொடர் அபாயத்தை மேற்கொண்டு வருகிறது. காரைக்காலில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மீனவர்கள் உதவ முன்வந்தாலும், அவர்களை ஒருங்கிணைக்க முறையான அரசு கட்டமைப்பு ஏதும் இல்லை என குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர் பாரதி கூறுகை யில், “காரைக்காலில் ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு முறையான பாது காப்பு மற்றும் பொரிப்பகங்கள் இல்லை. இதனால் கடந்த ஆண்டு சேக ரிக்கப்பட்ட பல முட்டைகள் காணாமல் போயுள்ளன. அரசிற்கு இதுதொடர் பாக கோரிக்கை வைத்தாலும் கண்டு கொள்வதில்லை” என அவர் குற்றம் சாட்டியுள்ளார். விளக்கம் புதுச்சேரி வனப்பாதுகாவலர் பி. அருள்ராஜன் கூறுகையில், “பொரிப்பகங்களை விட, ஆமைகள் முட்டையிடும் இடத்திலேயே அவற்றைப் பாதுகாக்கும் ‘இன்-சிட்டு’ முறையே அதிக பலன் தரும். போதிய பணியாளர்கள் இல்லை என்பது தவ றானது. துறைரீதியான பாதுகாப்பு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கிறது. முறையான பயிற்சி இல்லாத தன்னார்வலர்கள் நேரடியாக இதில் ஈடுபடுவது ஆமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்” என அவர் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?