ஜன.9 தென்காசியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஜன.9 தென்காசியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 தென்காசி, ஜன.

- தென்காசி மாவட்டத்தில் 26.12.2025 ஆம் தேதியன்று நடைபெற இருந்த 2025 டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வருகின்ற ஜனவர் 9 வெள்ளியன்று காலை 11 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள். எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்வதோடு மனுவில் தங்களது கைபேசி எண்ணையும் குறிப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாய குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப் படும் மனுவிற்கான ஒப்புகையும் மனுவின் கோரிக்கை தொடர்பான விபரங்களும் அனைத்து வகை கைபேசிக ளிலும் பார்க்கும் வண்ணம் செயலி வாயிலாக குறுஞ்செய்தி யாக அனுப்பப்படும். இக்குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு தென்காசி மாவட்ட விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%