நாகர்கோவில்,ஜன.- கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா ஜனவரி 6 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், இம்முகாமில் சிறந்த மருத்துவர்களை வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தங்களது முழு உடலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அட்டை பெற்ற நபர்களுக்கு, இம்முகாமில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முகாமில் ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிகள் (மகப்பேறு) என மூன்றாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 8 அன்று பத்மநாபபுரம் நகராட்சி, இரணியல், விலவூர், திருவிதாங்கோடு ஆகிய பேரூராட்சி மற்றும் முத்தலக்குறிச்சி, சடையமங்கலம், நுள்ளிவிளை, கல்குறிச்சி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் – முழு உடல் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?