காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை வேண்டும் புதைபடிவ எரிபொருட்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தி மக்கள் மாபெரும் போராட்டம்
பிரேசிலில் காப்-30 காலநிலை மாநாடு நடந்து வரும் நிலையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஆக்கப்பூர்வ மான நடவடிக்கையை விரை ந்து முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் மக்கள் பேரணி நடந்தது. அதிகளவிலான புதை படிவ எரிபொருட்கள் பயன்பா ட்டுக்கு எதிராக ஆயிரக்க ணக்கான ஆதிவாசி மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள், பறவைகளின் இறகுகளை தலையில் வைத்துக்கொண்டு பாரம் பரிய பழங்குடியினர் உடைக ளுடன் பேரணியில் கலந்து கொண்டனர். எங்கள் வாழ்வாதாரத்தி ற்காக நாங்கள் போராடு வோம் என்ற மக்களின் முழக் கங்கள், பிரேசிலின் நாட்டுப் புறப் பாடல்கள், போராட்ட கோ சங்கள் நகரம் எங்கும் எதிரொ லித்தன. காலநிலை மாற்றத்தை விரைவாக கட்டுப்படுத்த வலியுறுத்தி நான்காண்டுக ளுக்கு முன்பு க்ளாஸ்கோ நகரில் பெரும் போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு இதுவே மிகப்பெரிய மக்கள் போராட்டமாக உள்ளது. இப் பேரணியின்போது இத்தாலி யின் பெல்லா சியாவோ (Bella Ciao) என்ற புகழ்பெற்ற பாடல் இசைக்கப்பட்டது. சவப் பெட்டிகள், பாம்பு சிற்பம்... உலக நாடுகளின் தலை வர்கள் பங்கேற்புடன் நடை பெற்று வருகின்ற மாநாட்டுக் கூடத்திற்கு வெளியில் மக்கள் ஒன்றுகூடி பேரணியாகச் சென்றனர். கறுப்பு நிற ஆடை அணிந்த நூற்றுக்கணக் கான பெண்கள், ஆண்கள் இரண்டு பெரிய பொம்மைக ளுடன் புதைபடிவ எரிபொ ருட்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தினர். அதில் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு என்று எழுதப்பட்ட மூன்று சவப்பெட்டி களை சுமந்து சென்றனர். அமேசான் காடுகளில் வாழும் மக்களின் புனிதச் சின்னமாகவும் உயிர் பன்ம யத் தன்மையின் அடையாள மாகவும் கருதப்படும் பாம்பு கள் உள்ளிட்ட விலங்குகளை காக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் முப்பது மீட்டர் நீளமுள்ள கோப்ரா என்று பெயரிடப் பட்ட ஒரு பாம்பு சிற்பம் ஊர்வ லத்தில் எடுத்துவரப்பட்டது. அமேசான் காடுகளில் வாழும் விலங்குகளின் உருவங்க ளை முகத்தில் வரைந்து காடு களையும் விலங்குகளையும் பாதுகாக்க வலியுறுத்தினர். குறிப்பாக போராட்டக்கா ரர்கள் காலநிலை மாற்றத் தின் மோசமான விளைவு களை குறைக்க ஆதிவாசி மக்களின் நிலங்கள் அவர்க ளிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர்க ளை காடுகளில் இருந்து வெளியேற்றக்கூடாது என் றும் வலியுறுத்தியுள்ளனர். நடந்து வருகிற காப்-30 மாநாடு முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலை யில் பெரும்பரப்பில் காடு களை உடைய நாடுகள் அவற் றை பாதுகாக்க வெப்ப மண்டல காடுகளுக்கான நிரந் தர வசதி நிதியம் என்று பெயரிட ப்பட்ட புதிய நிதியம் ஒன்று மாநாட்டில் உருவாக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இந்த நிதியத்திற்கு 25 பில்லியன் டாலர் நிதி சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதில் இதுவரை 5.5 பில்லியன் டாலர் வழங்க சில நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. நிதி வழங்க உறுதி செய்துள்ள நாடுகளில் சீனா முக்கிய இடம் வகிக்கிறது.