ஈரானிடம் எண்ணெய் கொள்முதல்; இந்திய நிறுவனம் உள்பட 17 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானிடம் எண்ணெய் கொள்முதல்; இந்திய நிறுவனம் உள்பட 17 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை



ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்திய நிறுவனம் உள்பட 17 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.


மேற்கு ஆசிய நாடான ஈரான் 2015ல் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளுடன் ஒரு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2018ல் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஈரான் யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்தது. எனவே ஈரான் மீண்டும் ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.


இந்த நிலையில் ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்திய நிறுவனம் உள்பட 17 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.


இது தொடர்பாக அமெரிக்க அரசு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈரானுடன் சட்டவிரோத பெட்ரோலிய கொள்முதலில் ஈடுபட்டு வந்த இந்திய நிறுவனம் உள்பட 17 நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் கொள்முதல் மூலம், ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு மறைமுக நிதியுதவி வழங்கப்படுகிறது. எனவே, அதனை தடுக்கும் விதமாக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஈரானிடம் எண்ணெய் கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த டிஆர்6 பெட்ரோ இந்தியா எல்எல்பி என்ற பெட்ரோலியப் பொருட்கள் வர்த்தக நிறுவனம் அமெரிக்க தடைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அக்டோபர் 2024 முதல் ஜூன் 2025 வரை ஈரானில் இருந்து சுமார் ரூ.80 கோடி அளவிலான தாரை இந்நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%