காலவரையற்ற போராட்டம் வாபஸ்: ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு

காலவரையற்ற போராட்டம் வாபஸ்: ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு



முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி


சென்னை, ஜன.


புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்ட முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை தெரிவித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் காலவரையற்ற போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.


புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் முதல்வருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.


இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் த.உதயச்சந்திரன், நிதித்துறை துணைச் செயலாளர் (வரவு செலவு) பிரத்திக் தாயள், குழு உறுப்பினர் கே.ஆர். சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறியதாவது:


முதல்வரின் அறிவிப்பினை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். வரும் நிதியாண்டில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். ஓய்வூதியத் திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வெளியான பிறகு அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் மீண்டும் முதல்வரிடம் முறையிடுவோம். எங்களுடைய மற்ற கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படிப்படியாக நிறைவேற்றித் தருவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். 23 ஆண்டு கால ஓய்வூதியம் இல்லாத நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 6–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%