கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும் மாதம்தோறும் மின்கணக்கீடு வாக்குறுதி: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சென்னை: வாக்குறுதியை நிறைவேற்றும் நேர்மைதான் இல்லையென்றால் வழக்கத்தில் உள்ளதை பின்பற்றும் திறமையும் திமுக அரசிடம் இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ்தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: தொட்டாலே ஷாக் அடிக்கும் மின்கட்டணம் என எதிர்க்கட்சியாக இருக்கும்போது மின்கட்டண உயர்வைக் கண்டித்து போர்க்கொடி தூக்கிய திமுக, ஆளுங்கட்சியாக அரியணை ஏறிய பிறகு அடுக்கடுக்காக மின் கட்டணத்தை உயர்த்தியதோடு, மக்களின் மின்கட்டணச் சுமையைக் குறைக்கும் மாதமொருமுறை மின்கணக்கீடு என்ற தங்களின் தேர்தல் வாக்குறுதியை
கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பில் போட்டுவிட்டது. மேலும், மத்திய அரசு ஒதுக்கிய ஸ்மார்ட் மீட்டர்களையும் பொறுத்தாமல், மத்திய அரசின் சூரியமின் திட்டங்களையும் செயல்படுத்தாமல், தமிழகத்தின் தற்சார்பு மின் உற்பத்தியையும் பெருக்காமல், தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கடன் வாங்கி, அந்த நிதிச்சுமையையும் மக்கள் தோள் மீதே ஏற்றி திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது.
இதுவரை நடைமுறையில் இருந்த இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மின் கணக்கீடு என்ற முறையையும் சரிவர செயல்படுத்தாமல் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நேர்மைதான் திமுகவிடம் இல்லையென்று பார்த்தால், ஏற்கெனவே வழக்கத்தில் உள்ளதைச் சரியாகப் பின்பற்றும் திறமையும் இல்லை என்பதற்கான சான்றுதான் இது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?