12,552 கிராமங்களுக்கும் பாரத் நெட் சேவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

12,552 கிராமங்களுக்கும் பாரத் நெட் சேவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்


சென்னை, அக்.10 - தமிழ்நாட்டில் உள்ள 12,552 கிராமங்களுக்கும் பாரத் நெட் சேவை கொண்டு செல்லப்படும் எனவும், கிராம சபை கூட்டத்தில் 10,000 கிராம பஞ்சாயத்துகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங்கில் பேசவுள்ளார் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப அரங்கில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “பைபர் நெட்வொர்க் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 12,552 கிராம பஞ்சாயத்துகளுக்கும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்கவுள்ளோம். இதுவரை 11,800 கிராமங்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள சிறுதொழில் நிறுவனங்கள் முன்வராததால் இந்த பைபர் நெட் இணைப்புகளை வீடுகளுக்கு கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “சனிக்கிழமை (அக்.11) நடைபெறும் கிராம சபை கூட்டத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலம் பைபர் நெட் இணைப்பை பயன்படுத்தி, 10,000 கிராமங்களில் உள்ள பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். இது மாநிலம் முழுவதுமுள்ள 10,000 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு நேரலையாக ஒளிபரப்பப்படும்” என்றார். “கிராமங்களுக்கு அளிக்கப்படவுள்ள இணையதளத்தின் வேகத்தை குறைக்க விரும்பவில்லை. மாதம் 199 ரூபாய் பிளானில் கொடுக்கவுள்ளோம். சுமார் 4 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு இணையவசதி கொடுக்க திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் 12,552 கிராமங்களுக்கும் பாரத் நெட் சேவை கொண்டு செல்லப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%